சோளம் நன்மைகள் | Sweet Corn Benefits in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சோளம் சாப்பிடுவதால் என்னென்ன (Corn Benefits in Tamil) நன்மைகள் கிடைக்கிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் சாப்பிடும் உணவுகளில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டு அடங்கியுள்ளது. பெருமபாலும் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் நன்மைகளை பற்றி தான் நமக்கு தெரிந்திருக்கும்.அந்த வகையில் சோளத்தை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சோளத்தை பலரும் விரும்பி சாப்பிடுவோம். இதனை ரெசிபியாகவும் செய்து சாப்பிடுவோம், அவித்தும் சாப்பிடுவோம். இதில் மாவு சத்து அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் இந்த பதிவில் சோளத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
100 கிராம் சோளத்தில் உள்ள சத்துக்கள்:
- கலோரிகள்-365 கிராம்
- கொழுப்பு -4.7 கிராம்
- கொலஸ்ட்ரால்-0
- சோடியம்- 35 mg
- பொட்டாசியம் – 287 mg
- புரதத்துடன் 74 கிராம்
- இரும்புச்சத்து- 15%
- வைட்டமின் பி-6 – 30%
- மெக்னீசியம் -31%
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தெரியுமா.?
சோளத்தின் நன்மைகள் | cholam benefits in tamil:
மூள நோய்:
சோளத்தில் நார்ச்சத்து 18% நிறைந்துள்ளது. இதனால் குடல் இயக்கத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. செரிமான பிரச்சனைக்கு உதவி செய்து மலசிக்கல் பிரச்சனையை சரி செய்து மூல நோய் பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.
எடை அதிகரிக்க:
நீங்கள் எடை குறைவாக இருக்கிறீர்கள் என்று கவலைப்பட்டால் அதற்கு சோளம் சிறந்ததாக இருக்கும். சோளத்தில் அதிக அளவு கலோரிகள் இருக்கிறது, இதனால் உடல் எடை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது:
சோளம் புற்றுநோயை தடுப்பதற்கு உதவுகிறது. உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை நீக்குவதற்கு உதவுகிறது. பிரீ ரேடிக்கல் உருவாவது புற்றுநோயை வளர செய்யும். இதன் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியம்:
சோளத்தில் உள்ள ஒமேகா 3 உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க உதவுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
பாரம்பரிய சிறுதானிய உணவின் சுவையும், அதன் பயன்களும்..!
இரத்த சோகை:
சோளத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை புதிதாக உருவாக்குகிறது. மேலும் இதன் மூலம் இரத்த சோகை வருவதையும் தடுக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |