கிரான்பெர்ரி பழம் பயன்கள் | Cranberry Benefits
நாம் அனைவருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைய ஊட்டசத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்றும், இவை அனைத்தும் உடலுக்கு பல வகையான நன்மை அளிக்கிறது என்றும் தெரியும். ஆனால் எந்த பழங்களில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்றும் அத்தகைய சத்துக்களால் நமது உடலில் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் கிடைக்கிறது என்ற துல்லியமான விவரங்கள் தெரிவது இல்லை. அதனால் இன்று ஆங்கிலத்தில் கிரான்பெர்ரி என்று அழைக்கப்படும் குருதிநெல்லி பழத்தில் உள்ள பயன்கள் என்னென்ன என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இதுநாள் வரையிலும் இந்த பழத்தினை சாப்பிட்டு இருந்து அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரியாமல் இருந்து இருந்தால் இப்போதே தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இளமையை மீட்டுத்தரும் அவகோடா பழத்தின் நன்மைகள் |
குருதிநெல்லி நன்மைகள்:
உணவு செரிமானம்:
கிரான்பெர்ரி பழத்தினை நாம் சாப்பிடுவதனால் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவினை சரியான முறையில் செரிமானம் அடையச்செய்கிறது. இவ்வாறு உணவு செரிமானம் அடையும் காரணத்தினால் மலச்சிக்கல் பிரச்சனையும் சரி செய்கிறது.
இதோடு மட்டும் இல்லாமல் உடல் பருமன் அதிகமாக இருப்பதையும் குறையச் செய்கிறது.
நீரிழிவு நோய்:
இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிஃபீனால்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் இத்தகைய பழத்தினை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினை கட்டுக்குள் கொண்டுவரச் செய்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க:
மனித உடலில் வரும் நோய்களில் மிகவும் ஆபத்தானது என்றால் அது புற்றுநோய் தான். அந்த வகையில் இந்த குருதிநெல்லி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழிக்க உதவுகிறது.
முந்திரி பழம் நன்மைகள் |
சரும பாதுகாப்பு:
வைட்டமின் C சத்து இந்த பழத்தில் நிறைந்து இருக்கிறது. அதனால் இந்த பழத்தினை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது சருமம் பாதுகாப்பாக இருக்கிறது. மேலும் பளப்பளப்பாகவும் இருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
கிரான்பெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் அனைத்தும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்கிறது. ஆகையால் கிரான்பெர்ரி பழத்தினை சரியான அளவில் சாப்பிடவ வேண்டும்.
இதய ஆரோக்கியம்:
இந்த பழம் நமது உடலின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதாவது இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைக்கிறது மேலும் இதய வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
குருதிநெல்லி பழத்தில் உள்ள சத்துக்கள் நமது உடலில் பல நன்மைகளை தந்தாலும் கூட இதனை சரியான அளவில் சாப்பிடுவது தான் நல்லது.
கொழுப்பு உற்பத்தி:
கிரான்பெர்ரி பழத்தினை நாம் சரியான அளவில் சாப்பிட்டால் இது நமது உடலில் நல்ல கொழுப்பின் உற்பத்தி திறனை அதிகரிக்க செய்து தேவையற்ற கொழுப்பினை கறையச் செய்கிறது. இவ்வாறு நல்ல கொழுப்பின் உற்பத்தி திறன் என்பது அதிகரிக்கும் போது மாரடைப்பு மற்றும் உடல் பருமன் என இவற்றை எல்லாம் வராமல் தடுக்கிறது.
பலாப்பழத்தின் நன்மைகள்.. Jackfruit Benefits..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |