சீத்தாப்பழம் என்றால் ரொம்ப பிடிக்குமா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

சீத்தாப்பழம் தீமைகள் | Custard Apple Side Effects in Tamil 

வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களிடம் ஒரு கேள்வி..? உங்களுக்கு பழங்கள் சாப்பிட பிடிக்குமா..? இதென்ன கேள்வி என்று யோசிப்பீர்கள். பொதுவாக பழங்கள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். சிலருக்கு ஒருசில பழங்கள் பிடிக்காது. ஆனால் அனைவருக்கும் பிடித்த பழங்களில் இதுவும் ஓன்று. எது என்று யோசிக்கிறீர்களா..? சீத்தாப்பழத்தை பற்றி தான் கூறுகிறேன். சீத்தாப்பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? சீத்தாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் சீத்தா பழத்தின் நன்மைகள் 

சீதாப்பழத்தில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா..? 

சீத்தாப்பழம் தீமைகள்

சரி நண்பர்களே சீத்தாப்பழத்தில் இருக்கும் நன்மைகளை மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொண்டீர்கள். ஆனால் சீத்தாப்பழத்தில் இருக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்னது சீத்தாப்பழத்தில் தீமைகளா என்று ஆச்சர்யமாக கேட்பீர்கள்.

பொதுவாக கால்சியம், வைட்டமின் C, A மற்றும் B6, மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் இதில் அதிகமாகவே காணப்படுகிறது. இருந்தாலும் சீத்தாப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆப்பிள் பழம் நன்மைகள்

நரம்பு மண்டலத்தை பாதிக்கும்:

சீத்தாப்பழம் தீமைகள்

அனோனாசின் என்ற ரசாயன கலவை சீத்தாப்பழத்தில் காணப்படுகிறது. அதனால் நாம் சீத்தாப்பழம் அதிகமாக உட்கொள்ளும் போது, இந்த கலவை நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால் அது நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வயிற்று பிரச்சனைகள் ஏற்படும்: 

சீத்தாப்பழத்தில் இரும்பு மற்றும் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் அதிக அளவு இரும்புச்சத்து குடல் புண், தலசீமியா அல்லது பெருங்குடல் அழற்சியை ஏற்படுத்தும்.

மேலும் இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்  பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதாவது, மங்கலான பார்வை, தலைச்சுற்றல், குமட்டல், மயக்கம் அல்லது கவனம் இல்லாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

உடல் எடை அதிகரிக்கும்:

சீத்தாப்பழம் தீமைகள்

சீத்தாப்பழம் அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும். இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. காரணம் இதில் கலோரிகள் அதிகமாக காணப்படுகின்றன. அதன் காரணமாக இது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. மேலும் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற பல்வேறு உடல் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதனால் சீத்தாப்பழத்தை ஒரு அளவோடு உட்கொள்வது நல்லது. அதுபோல  சீத்தாப்பழம் உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட பெரிதும் உதவுவதால், நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்தம் திடீரென குறையக்கூடும். அதனால் மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் சீத்தாப்பழத்தை மருத்துவரின் அனுமதி பெற்று சாப்பிடுவது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement