பேரிச்சம் பழம் தீமைகள் | Dates Side Effects in Tamil
பொதுவாக மருத்துவர்களும் சரி நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்களும் சரி எப்போதும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு அல்லது காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள பிள்ளைகள் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை விட தீமை விளைவிக்கும் உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் நாம் அனைவரும் இரத்தம் அதிகரிப்பதற்கும், உடலில் சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றும் பேரிச்சம் பழம் சாப்பிடுவோம்.
ஆனால் இத்தகைய பேரிச்சம் பழத்தினை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறாக நாம் எதை சாப்பிட்டாலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அத்தகைய பக்க விளைவுகள் எந்த அளவிற்கு இருக்கும் என்றும் அவை என்னென்ன என்றும் நம்மில் சிலருக்கு தெரிவது இல்லை. அதனால் இன்று பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் A
- வைட்டமின் B1
- வைட்டமின் B2
- வைட்டமின் B3
- வைட்டமின் C
- நார்ச்சத்து- 6.7 மில்லி கிராம்
- துத்தநாகம்- 0.44 மில்லி கிராம்
- மாங்கனீசு- 54 மில்லி கிராம்
- பாஸ்பரஸ்- 62 மில்லி கிராம்
- கொழுப்புகள்- 0.15 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்- 75 கிராம்
- புரதம்- 1.81 கிராம்
- இரும்பு- 0.9 மில்லி கிராம்
- கால்சியம்- 64 மில்லி கிராம்
- சோடியம்- 1 மில்லி கிராம்
நாம் சாப்பிடும் 100 கிராம் பேரிச்சம் பழத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள எண்ணற்ற சத்துக்கள் ஆனது அடங்கி உள்ளது.
பேரிச்சம் பழம் தீமைகள்:
வயிற்றில் வீக்கம்:
நாம் சாப்பிடும் பேரிச்சம் பழத்தில் நார்சத்து ஆனது நிறைந்து இருக்கிறது. இதனை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதனால் நம்முடைய உடலில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். அதாவது வயிறு வலி, வயிற்று போக்கு மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
உடல் பருமன் அதிகரிக்க:
உடலை எடையினை அதிகரிக்க வைக்காமல் இருப்பதற்கான நார்சத்து ஆனது பேரிச்சம் பழத்தில் நிறைந்து இருந்தாலும் கூட, இதில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.
ஏனென்றால் பேரிச்சம் பழத்தில் 1 கிராமிற்கு 2.8 கலோரிகள் இருப்பதால் இதனை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதனால் உடல் பருமனை அதிகரிக்க செய்கிறது.
ஆஸ்துமா பிரச்சனைகள்:
ஆஸ்துமா உள்ளவர்களும், அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களும் பேரிச்சம் பழத்தினை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் சாப்பிடவே கூடாது. ஏனென்றால் இதனை நீங்கள் உட்கொள்வதன் மூலமாக ஆஸ்துமா பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
நீரிழிவு நோய் அதிகரிக்க:
பேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ், கலோரிகள் மற்றும் சுக்ரோஸ் போன்ற பல சத்துக்கள் அடங்கி உள்ளது. இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடும் போதும் உடலில் நீரிழிவு நோயினை அதிகரிக்க செய்து விடுகிறது.
கோளாறு:
குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக பேரிச்சம் பழத்தினை நாம் கொடுப்பதனால் அது எளிதில் செரிமானம் ஆகாமல் அஜீரண கோளாறு பிரச்சனையினை உண்டாக்குகிறது. மேலும் இதோடு மட்டும் இல்லாமல் மூச்சு திணறல் பிரச்சனையினையும் பக்க விளைவாக ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |