வெயில் காலத்தில் அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்..! அப்போ இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!

Disadvantages of Drinking Ice Water in Tamil

மனிதன் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம். நம் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்து கிடைக்காவிட்டால் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். எனவே தண்ணீர் அதிகமாக பருக வேண்டியது அவசியம். அதிலும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடல் விரைவில் வறட்சி அடைந்துவிடும். அடிக்கிற வெயிலுக்கு அனைவருக்கும் ஜில்லுனு தண்ணீர் குடிக்க தான் தோன்றும். இதற்காக கோடைகாலத்தில் பிரிட்ஜ் முழுவதும் தண்ணீர் பாட்டில்களை நிரப்பி வைத்து விடுகிறோம். ஆனால் இதனை அடிக்கடி அருந்துவதால் உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி நமக்கு தெரிவதில்லை. எனவே வெயில் காலத்தில் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டுமே தவிர ஐஸ் வாட்டர்களை அதிகமாக அருந்த கூடாது. இதற்கு பதிலாக மண் பானையில் தண்ணீர் வைத்து அருந்தலாம். ஓகே வாருங்கள், ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Side Effects of Drinking Cold Water in Summer in Tamil:

 side effects of drinking cold water in summer in tamil

உடல் கொழுப்பை அதிகரிக்கும்:

ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதை தடுக்கிறது. இதனால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்க ஆரமித்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் அருந்துதல் கூடாது.

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா..?

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்:

பிரிட்ஜில் இருக்கும் தண்ணீரை அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே கோடை காலத்தில் கூட ஐஸ் வாட்டர் அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

செரிமான பிரச்சனை ஏற்படும்:

 disadvantages of drinking cold water in the morning in tamil

அதிகமாக குளிர்ந்த நீர் அருந்துவதால் உடலின் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். இதனால் உணவு செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. மேலும் இரத்த நாளங்களில் சுருக்கத்தையம் ஏற்படுத்துகிறது.

பல் கூச்சம் ஏற்படும்:

 ஐஸ் வாட்டர் தீமைகள்

ஐஸ் வாட்டர் அருந்துவதால் பல் கூச்சம் ஏற்பட்டு வேறு எந்த உணவுகளையும் சாப்பிட முடியாமல் போகிறது. எனவே ஐஸ் வாட்டர் அதிகம் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

தொண்டை பிரச்சனை:

குளிர்ச்சியான தண்ணீரை அடிக்கடி பருகுவதால் தொண்டை புண், மூக்கடைப்பு மற்றும் தொண்டையில் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சுவாசக்குழாயில் அதிகப்படியான சளி உருவாவதற்கும் காரணமாக இருக்கிறது. இதனால் உடலில் நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.

இதய துடிப்பு குறைகிறது:

குளிர்ந்த நீரை அருந்தும்போது தலையில் உள்ள நரம்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இது இதய துடிப்பை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா..?

உடல் எடை அதிகரிக்கும்:

 can we drink cold water in summer in tamil

ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடல் எடை கூடும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஐஸ் வாட்டர் அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

தலைவலியை ஏற்படுத்துகிறது:

 drinking cold water disadvantages in tamil

ஐஸ் வாட்டர் அருந்தியவுடன் அது மூலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் தலைவலி ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குளிர்ந்த நீர் முதுகெலும்பில் உள்ள நரம்புகளையும் பாதிக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil