நீங்கள் தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீங்களா.! அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!

Side Effects of Drinking Water in Plastic Bottles in Tamil

Disadvantages of Drinking Water in Plastic Bottles 

இக்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. என்னதான் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு அரசு தடை விதித்தாலும் ஒரு சில இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. அதிலும் குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மனிதனுக்கு தீங்கானவை என்பதால் தான் அதனை பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கு மாறாக நாம்  பிளாஸ்டிக் பாட்டிலில் தான் தண்ணீர் வைத்து குடிக்கின்றோம். இதனால் உடலில் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செம்பு பாத்திரம் தீமைகள்

Side Effects of Drinking Water in Plastic Bottles in Tamil:

Side Effects of Drinking Water in Plastic Bottles in Tamil

பிளாஸ்டிக் பாட்டிலில் தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவது உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும். ஏனென்றால் பெரும்பாலான பிளாஸ்டிக் பாட்டில்கள் (PET – Polyethylene Terephthalate) பாலிஎதிலீன் டெரெப்தாலேட் என்ற மெட்டீரியலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பாலிஎதிலீன் டெரெப்தாலேட்டில் Bisphenol என்ற கெமிக்கல்கள் கலந்துள்ளது. எனவே நாம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைத்து குடிப்பதால் இந்த கெமிக்கல்கள் உடலிற்குள் சென்று பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

 why we should not drink water in plastic bottles in tamil

  1. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துவதால் நீரிழிவு நோய், உடல் பருமன், சிறுவயதிலே பருவமடைதல், கருவுறுதல் பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
  2. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துவதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
  3. தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும் பாட்டிலில் சூரிய ஒளி நேரடியாக படும்போது அதில் உள்ள டையாக்சின் என்ற நச்சுப்பொருள் தண்ணீரில் கலந்து விடுகிறது. இத்தண்ணீரை நாம் பருகினால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
  4. பிளாஸ்டிக்கில் பித்தலேட் என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இப்பாட்டிலில் நாம் தண்ணீரை அடைத்து தொடர்ந்து பருகி வருவதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
  5. மேலும், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் அருந்துவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.

⇒ எனவே, மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் பருகுவதை தவிர்த்து விடுங்கள். நாம் செய்கின்ற சிறிய சிறிய தவறுகள் தான் பெரிய அளவில் நோய்களாக வந்து இருக்கும்.

பிளாஸ்டிக் மாசு பற்றிய தமிழ் கட்டுரை

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips