Side Effects of Eating Broccoli in Tamil | ப்ரோக்கோலி தீமைகள்
ப்ரோக்கோலியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்றே. இருப்பினும், அதில் ஒரு சில தீமைகளும் இருக்கிறது என்று நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆமாங்க, ப்ரோக்கோலியை அதிகமாக சாப்பிட்டால் நம் உடலிற்கு ஒரு சில பக்க விளைவுகள் உண்டாகிறது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூடாது. இந்த உணவை மட்டுமின்றி எந்தவொரு உணவுகளையும் சுவை நன்றாக இருக்கிறது என்று அதிகமாக சாப்பிடுதல் கூடாது. இதனை, கருத்தில் கொண்டே அக்காலத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறியிருக்கிறார்கள். எனவே, என்னதான் ப்ரோக்கோலி நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதில் சில பக்க விளைவுகளும் உள்ளது. எனவே,அவற்றை பற்றி பின்வருமாறு காண்போம்.
Side Effects of Eating Broccoli Everyday in Tamil:
ப்ரோக்கோலியில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் சி
- வைட்டமின் கே
- நீர்ச்சத்து
- கார்போஹைட்ரேட்டுகள்
- புரதம்
- கொழுப்பு
- வைட்டமின் பி
காலிபிளவர் Vs ப்ரோக்கோலி இந்த இரண்டில் எது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது தெரியுமா..?
ப்ரோக்கோலி தீமைகள்:
வாயுவை ஏற்படுத்தும்:
ப்ரோக்கோலி நமக்கு பல நன்மைகளை அளித்தாலும், அதனை அதிகமாக சாப்பிடும்போது வாயு பிரச்சனையை உண்டாக்கக்கூடும். இதனை அதிகமாக சாப்பிடும்போது, குடலில் முறிவு செயல்முறையை தூண்டுகிறது. இதனால் வாயு உண்டாகுகிறது. எனவே, ப்ரோக்கோலியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தைராய்டை ஏற்படுத்தும்:
ப்ரோக்கோலி கோய்ட்ரோஜன்கள் எனப்படும் உணவு வகையைச் சேர்ந்தது. இது தைராய்டு பிரச்சனைக்கு வழி வகிக்கிறது. எனவே, ப்ரோக்கோலியை உணவில் மிதமான அளவில் சேர்த்து கொள்ளுங்கள்.
ப்ரோக்கோலியில் ஐசோதியோசயனேட்டுகள் உள்ளன, அவை கோய்ட்ரோஜன்கள் மற்றும் அயோடின் உறிஞ்சுதலை மாற்றுகிறது. இது, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மாற்றுவதோடு ஹைப்போ தைராய்டிசத்தை ஏற்படுத்துகிறது.
தந்தூரி ப்ரோக்கோலி செய்யும் போது இதை சேர்த்தால் தான் சுவை மாறாமல் இருக்கும்..!
தலைவலி ஏற்படலாம்:
ப்ரோக்கோலியை அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு தலைவலி ஏற்படலாம். மேலும், மூச்சு திணறல், மூக்கடைப்பு தோல் வெடிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |