டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் ஆபத்தா..?
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை தான் தெரிந்துகொள்ள போகின்றோம். அது என்ன பதிவு என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி உங்களுக்கு டீயுடன் பிஸ்கட் நனைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக நம்மில் பலருக்கும் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதிலும் சிலர் காலையில் எழுந்து டீ குடிக்கும் போது பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா..? கெட்டதா..? வாங்க தெரிந்து கொள்வோம்.
டீயுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்.. உங்களுக்கு தெரியுமா
வெறும் வயிற்றில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா..?
பொதுவாக நம் அனைவருக்குமே காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கவில்லை என்றால், அந்த நாளே ஓடாது. அதிலும் நம்மில் பலரும் காலையில் டீ குடிக்கும் போது பிஸ்கட் நனைத்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லாத்தா கெட்டதா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? இன்னும் சிலர் கைக் குழந்தைகளுக்கு காலையில் பிஸ்கட்டில் டீ ஊற்றி நினைத்து அதை உணவாக ஊட்டுவார்கள்.
பாலுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்..
ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறான விஷயம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. டீயுடன் பிஸ்கட் நினைத்து காலை நேரத்தில் சாப்பிடுவதை விட, மாலை நேரத்தில் சாப்பிடுவது தான் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- காரணம், நாம் காலையில் வெறும் வயிற்றில் டீயுடன் பிஸ்கட் நனைத்து சாப்பிட்டால், அது வயிற்றில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- நாம் வெறும் வயிற்றில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றில் செரிமாண பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் நாம் காலையில் சாப்பிடும் உணவு கூட விரைவாக செரிமானம் ஆவதில்லை.
- அதுமட்டுமில்லாமல், இப்படி டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் போது அது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
- மேலும் வயிற்று புண், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
- இன்னும் சொல்லப்போனால், பிஸ்கட்டில் இருக்கும் சில இரசாயன பொருட்கள் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |