Disadvantages of Papaya Fruit in Tamil
பப்பாளி நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும் அதனை அதிகமாக உட்கொண்டால் நம் உடலுக்கு சில தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக எந்தவொரு பொருளையுமே அதிகமாக உட்கொண்டால் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எவ்விதமான உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலபேருக்கு தெரியாது.
ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்தவகையில் பப்பாளியை நீங்கள் அதிகமாக உட்கொண்டால் உடலில் எவ்விதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
What Are The Disadvantages of Papaya in Tamil:
செரிமான பிரச்சனைகள் ஏற்படும்:
பப்பாளியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருந்தாலும் அதனை அதிகமாக உட்கொள்வதன் மூலம் வயிற்று கோளாறு பிரச்சனையை உண்டாக்கும். அதாவது இதனை அதிகமாக உட்கொண்டால் வயிற்று போக்கு, வயிற்று வலி, இரைப்பை மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்,வயிற்றில் ஒரு விதமான எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா சாப்பிட கூடாதா
சுவாச கோளாறுகள் ஏற்படும்:
பப்பாளியில் பப்பேன் என்ற நொதி உள்ளது. இது ஒவ்வாமையை உண்டாக்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே இதனை அதிகமாக உட்கொள்வதன் மூலம் ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும்:
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூருக்கிறார்கள். ஏனென்றால் பப்பாளி கருவுறுதலை பாதிக்கும். அதாவது கரு வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் சவ்வுகளை சேதப்படுத்தி கருக்கலைப்பை ஏற்படுத்தும்.
மேலும் பழுக்காத பப்பாளியில் அதிக அளவில் லேடெக்ஸ் உள்ளது. இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாடித்துடிப்பை குறைகிறது:
பப்பாளி விதையிலுள்ள கார்பன் நாடித்துடிப்பை குறைக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
வெயில் காலத்தில் அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள் அப்போ இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
மற்ற பக்கவிளைவிகள்:
அளவுக்கு அதிகமாக பப்பாளி சாப்பிடுவதால் தொண்டையில் வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், தலைவலி, தலைச்சுற்றல், உடம்பில் தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |