இந்த காய்கறிகளை மட்டும் அதிகமா சாப்பிடாதீங்க..? மீறி சாப்பிட்டா அவ்ளோ தான்..!

Advertisement

அதிகம் சாப்பிட கூடாத காய்கறிகள் 

ஹலோ நண்பர்களே..! உங்களுக்கு காய்கறிகள் சாப்பிட பிடிக்குமா சொல்லுங்கள். ஏன் இந்த கேள்வி என்றால், நம்மில் பலருக்கும் காய்கறி என்றால் பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் என்ன தான் குழம்பில் காய்கறிகள் போட்டு வைத்தாலும் வெறும் குழம்பை மட்டும் தான் ஊற்றி சாப்பிடுவார்கள். காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் இருந்தாலும் யாரும் குழம்பில் போடும் காய்கறிகளை விரும்புவதில்லை.

அதற்கு மாறாக வறுவல் செய்யும் காய்கறிகளை தான் பலரும் விரும்புகின்றன. அதில் முக்கியமான ஓன்று தான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு வறுவல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்கள். அனைவருமே உருளைக்கிழங்கு வறுவலை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதுபோல நாம் சில காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு வருகின்றோம். அப்படி நாம் அதிகம் சாப்பிட கூடாத காய்கறிகள் எது என்று பார்க்கலாம் வாங்க..!

மாம்பழம் சாப்பிடும் போது தப்பி தவறிக்கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

தினமும் சாப்பிட கூடாத காய்கறிகள் 

பீட்ருட்:  

Beetroot

பீட்ரூட் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். பலரும் பீட்ரூட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இருந்தாலும் நாம் பீட்ரூட்டை அதிகளவில் சாப்பிடும் போது அது குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் பீட்ரூட்டில் உள்ள டயட்டரி நைட்ரேட், இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்த அளவை குறைக்கிறது. 

முட்டைகோஸ்: 

முட்டைகோஸ்

முட்டைகோஸ் மட்டுமில்லாமல் ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. ஆனால் இந்த உணவுகளை நாம் அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளும் போது, அது நமக்கு வாயு தொல்லையும், செரிமான கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. 

சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள் 

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு

நம்மில் பலரும் விரும்பி சாப்பிட கூடிய காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். ஆனால் நாம் தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அது நமக்கு தீங்கு விளைவிக்கிறது. காரணம் உருளைக்கிழங்கு அதிகமான மாவுச்சத்தைக் கொண்டது. எனவே இதில் கார்போஹைடரேட் அதிகமாக இருக்கிறது.

அதனால் இது செரிமானத்தில் சிக்கல் ஏற்படுத்தும். மேலும் இது வாயு தொல்லையையும், பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் உருளைக்கிழங்கில் அதிகமான கிளைசெமிக் இருப்பதால் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க.. மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா

பச்சை பட்டாணி: 

பச்சை பட்டாணி

சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு சேர்த்து சாப்பிடும் குருமாவுக்கு சுவை சேர்ப்பது இந்த பச்சை பட்டாணி தான். ஆனால் நாம் பச்சை பட்டாணியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட கூடாது. காரணம் பச்சை பட்டாணியை அதிகளவு  உண்ணும் போது, நம் உடலில் உள்ள வைட்டமின் K அதிகரிக்கிறது. இதனால் கால்சியத்தின் அளவு குறைகிறது. இதன் காரணமாக உடலில் அதிகளவில் யுரிக் ஆசிடை வெளியேற்ற காரணமாகிறது.

எனவே இந்த உணவுகளை தினமும் சாப்பிடாதீர்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement