முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் எது தெரியுமா?

Advertisement

முள்ளங்கியுடன் சாப்பிட கூடாத உணவுகள்

காய்கறிகள் பொதுவாக உடலுக்கு ஆரோக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். இவ்வுலகில் ஏராளமான காய்கறிகள் உள்ளன. அவற்றில் ஓன்று தான் முள்ளங்கி, முள்ளங்கி ஆரோக்கியமான நிலத்தடி காய்கறிகளுள் ஒன்றாகும். இவற்றில்பலவகையான  வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

முள்ளங்கி பலவகையான வயிறு தொடர்பான சிக்கல்களுக்கும், குடல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகளும் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. என்னதான் முள்ளங்கி பலவகையான நன்மைகளை தந்தாலும் இந்த முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் என்று இருக்கிறது அதனை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க..! மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

பாகற்காய்:

பாகற்காய்முள்ளங்கி மற்றும் பாகற்காய் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது எது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இதயத்திற்கும் ஆரோக்யமானதாக இருக்காது.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிட கூடாது. ஏன் என்றால் வெள்ளரிக்காயில் வைட்டமின் சி-யை உறிஞ்சும் அஷ்கார்பேட் உள்ளது எனவே இரண்டியும் சேர்த்து சாப்பிடுவது நல்லது கிடையாது.

தேநீர்:

முள்ளங்கி சாப்பிட்ட பிறகு தேநீர் குடிக்க கூடாது. ஏன் என்றால் அது மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஆரஞ்சு பழம்:

ஆரஞ்சு பழம்

 

ஆரஞ்சு பழம் மற்றும் முள்ளங்கி இரண்டியும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. ஏன் என்றால் அது வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாகி உடல்நல குறைபாடு ஏற்படும்.

பால்:

முள்ளங்கி உடல் சூட்டை அதிகரிக்க கூடியது எனவே அதனுடன் பால் சேர்த்து குடித்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிறு வலி போன்ற பிரச்சன்னைகள் ஏற்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 7 விஷயங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement