முட்டைக்கு இணையான சத்துக்களை தரக்கூடிய காய்கறிகள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா? | Do you know which vegetables are as nutritious as eggs?
உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.
முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த முட்டையை அனைவராலும் சாப்பிட முடியாது, அசைவ பிரியர்கள் முட்டையை சாப்பிடுவார்கள், ஆனால் சைவ பிரியர்கள் முட்டை சாப்பிட முடியாது. ஆக இன்றிய பதிவில் முட்டைக்கு நிகரான சத்துக்களை கொண்ட காய்கறிகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறான். ஆக சைவ பிரியர்கள் இங்கு கூறப்பட்டுள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முட்டையில் கிடைக்க கூடிய சத்துக்களை எளிதாக பெற முடியும் சரி வாங்க அந்த காய்கறிகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூல நோய் உள்ளவர்கள் மீன் சாப்பிடலாமா?
முட்டையைப் போல சத்து நிறைந்த காய்கறிகள் எது தெரியுமா?
ப்ரோக்கோலி:
ப்ரோக்கோலியில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. புற்று நோயை எதிர்த்தப் போராட கூடிய காய்கறியாகவும் உள்ளது.
பச்சை பட்டாணி:
அதிக அளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ், ஃபோலேட், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் பிந்த்ரா சத்துக்களும் பச்சை பட்டாணியில் நிறைந்துள்ளது.
இனிப்பு சோளம்:
இந்த இனிப்பு சோளத்திலும் அதில அளவு புரதச்சத்தும், குறைந்த அளவில் , கொழுப்பு சத்தும் நிறைந்துள்ளது. இதில் தியாமின், வைட்டமின் சி, வைட்டமின் B6, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. மேலும் 9% புரதச்சத்து உள்ளது.
கீரை வகைகள்:
புரதம் நிறைத்த உணவுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது கீரைகள் தான். இதில் வைட்டமின் K, வைட்டமின் C மற்றும் வைட்டமின் A போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கிராம்பு தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |