Does Drinking Tea Affect Your Skin in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு திரும்பினாலும் புகை மண்டலமும், சுற்று சூழல் மாசும், துரித உணவுகளும் தான் இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் நமக்கு உடலில் பல பாதிப்புகள் வருகிறது. சரி அதை விடுங்க, இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். சரி உங்களுக்கு டீ பிடிக்குமா..? இது என்ன கேள்வி என்று நினைப்பீர்கள். ஏன் கேட்கிறேன் என்றால், இந்த பிரச்சனைகளுக்கு டீ தான் காரணமாம். அது என்ன பிரச்சனை, டீ எப்படி பாதிப்பை தருகிறது என்று பார்க்கலாம் வாங்க..!
டீயில் வெல்லம் போட்டு குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த தகவலை தெரிஞ்சிக்கோங்க
டீ குடிப்பது சருமத்திற்கு பாதிப்பை தருகிறதா..?
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே காலையில் எழுந்ததில் இருந்து மாலை வரை டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. அப்படி டீ மனித வாழ்க்கையில் ஒரு நீங்கா இடத்தை பிடித்துவிட்டது.
இவ்வளவு ஏன் சில பேருக்கு டீ மட்டும் இருந்தாலே போதும். உணவு கூட தேவையில்லை.
ஆனால் ஒரு ஆராய்ச்சியில் டீ குடிப்பதால் சரும பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்னென்ன என்று இங்கு காணலாம்.
♦ நாம் அளவுக்கு அதிகமாக டீ குடிக்கும் போது, டீயில் இருக்கும் காபின் சிறுநீரை அடிக்கடி வெளியேற்றும். இதனால் உடலில் நீரிழப்பு அதிகமாகி, தோலில் வறட்சி மற்றும் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.
♦ தினமும் அதிகளவு டீ குடிப்பதால், நம் உடல் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கிறது. இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் வர காரணமாகிறது.
டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த பதிவு தான் |
♦ நாம் டீ அதிகமாக குடிக்கும் போது டீயில் உள்ள காஃபின் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரண்டும் சேர்ந்து உடலின் கொலாஜன் செயலிழப்பை உண்டாக்குகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம்மற்றும் தோல் தேய்வு மற்றும் சுருக்கம் ஏற்படுகிறது.
♦ நாம் இரவு நேரங்களில் டீ அதிகமாக குடிக்கும் போது அது தூக்கமின்மையை ஏற்படுத்தி, கண்களில் கருவளையத்தை உண்டாக்குகிறது.
♦ அதுபோல நாம் டீயில் இஞ்சி ஏலக்காய் போன்ற பொருட்கள் போட்டு குடிக்கும் போது, சில நேரங்களில் தோலில் அரிப்பு, அலர்ஜி, தோல் சிவத்தல் போன்ற பல சரும பாதிப்புகளை கொடுக்கிறது.
♦ மேலும் நாம் அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் சில நேரங்களில் தோல் புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
எனவே இனியாவது டீ அதிகமாக குடிப்பதை தவிர்க்கவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |