உங்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக உள்ளதா.! அப்போ இந்த உணவை சேர்த்து கொள்ளவும்..

Advertisement

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள் 

ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனாக இருக்கிறது. இந்த ஹார்மோன் பெண்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றாலும் ஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க ஈஸ்ட்ரோஜன் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நம் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் நமது ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மெனோபாஸ், பிசிஓஎஸ் மற்றும் சில மருத்துவ சிகிச்சைகள் காரணமாக நம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு குறையலாம். ஆனால் குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவை சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் சரி செய்யலாம். அதனால் தான் இந்த பதிவில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் உள்ள உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள்:

ஆளி விதை:

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள்

நம் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதற்கு சிறந்த உணவாக இருக்கிறது. ஆளி விதையில் லிக்னான்ஸ் நிறைந்துள்ளன. இவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதற்கு உதவுகிறது. அதனால் உங்கள் தினமும் உணவில் ஆளி விதையை சேர்த்து கொள்ளவும். 

சோயா:

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள்

சோயாவில் அதிக அளவு Isoflavones என்னும் கலவை உள்ளது. இவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவும் ஒரு வகை பைட்டோஈஸ்ட்ரோஜன் ஆகும். மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. சியாவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதனால் இதையும் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளுங்கள்.

பீச் பழம்:

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள்

இந்த பீச் பழத்தில்ஏராளமான நியூட்ரிசியன்கள் உள்ளது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

விறைப்பு தன்மை அதிகரிக்க உணவுகள்

எள் விதை:

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள்

எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கலாம். ஏனெனில் இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு லிக்னான்ஸ் உள்ளன. மாதவிடாய் நின்ற பெண்கள் எள் விதை பொடியை தினமும் உட்கொள்வது ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

காய்கறி:

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள்

ப்ரோக்கோலி , பிரஸ்ஸல் முளைகள் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளில் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. அதனால் இதனையும் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளவும்.

கடலை வகைகள்:

ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க உணவுகள்

முந்திரி, பாதாம், வேர்க்கடலை மற்றும் பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதனால் முடிந்தவரை இந்த உணவுகளையும் உணவில் சேர்த்து கொள்ளவும்.

ஈஸ்ட்ரோஜன் குறைந்ததற்கான அறிகுறிகள்:

  1. உலர்ந்த சருமம்
  2. பலவீனமான எலும்புகள்
  3. மென்மையான மார்பகங்கள்
  4. மனநிலை மற்றும் எரிச்சல்
  5. ஒழுங்கற்ற மாதவிடாய்

ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

 

Advertisement