முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு கிரீம் அப்ளை செய்தால் மட்டும் போதாது..

face glow food in tamil

Face Glow Food in Tamil

முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்காக கிரீம்களையும், பார்லருக்கு சென்றும் அழகுப்படுத்தி கொள்கிறார்கள். இப்படி செய்வதினால் சில நேரத்திற்கு மட்டும் தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. ஆனால் நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்றால் கிரீம் அப்ளை செய்தால் மட்டும் போதாது. சில உணவுகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும், அப்போது தான் உடல் மற்றும் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும். அதனால் இந்த பதிவில் உடல் முழுவதும் பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்:

பீட்ரூட்:

தோல் பளபளப்பாக இருக்க

பீட்ரூட்டிலும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இவை முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்கிறது. உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. பீட்ரூட்டை சமையல் செய்து சாப்பிடுவதை விட பச்சையாக ஜூஷாக செய்து சாப்பிடுவது முகத்தை பளபளப்பாக ஒளிர செய்யும்.

தயிர்: 

தோல் பளபளப்பாக இருக்க

தயிரில் லாக்டிக் அமிலம், துத்தநாகம், பி வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் போன்றவை நிறைந்துள்ளது. இவை தோல் பிரச்சனைக்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதனால் தினமும் ஒரு கப் தயிர் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க கற்றாழையுடன் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்தால் போதும்..

மஞ்சள் பால்:

தோல் பளபளப்பாக இருக்க

மஞ்சள் பால் உடல் நல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவை உடல்நல பிரச்சனைக்கும் மட்டுமில்லை, சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது. மஞ்சள் பால் என்றால் சில நபர்கள் தெரியாமல் இருக்கும். அது ஒன்றுமில்லை பசும்பாலை காய்த்து அதில் மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை தினமும் குடித்து வந்தால் உடலை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

கீரை:

 தோல் பளபளப்பாக இருக்க

வாரத்தில் மூன்று நாட்கள் கீரை வகைகளை சேர்த்து கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் பசலை கீரை நம் சருமத்தில் உள்ள கறைகளை அகற்றி பளபளப்பாக வைத்து கொள்ளும் வைட்டமின்கள், மினரல்ஸ் உள்ளது. இவை வயதான தோற்றம் வராமலும் பாதுகாக்கும்.

எலுமிச்சை:

 தோல் பளபளப்பாக இருக்க

எலுமிச்சையில் வைட்டமின் சி, பி, பாஸ்பரஸ் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

ஆளிவிதை:

ஆளிவிதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை நீரேற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதனால் ஆளிவிதையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளவும்.

முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு கிரீம் அப்ளை செய்யமால் இதை பண்ணுங்க

மாதுளை:

 தோல் பளபளப்பாக இருக்க

மாதுளை உடலி ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் வராமலும் பாதுகாக்கிறது. அதனால் மாதுளையை அப்படியேவும் சாப்பிடலாம், இல்லையென்றால் ஜூசாக செய்தும் சாப்பிடலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்