வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்

Advertisement

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்

காலை உணவு என்பது முக்கியமானது என்று அனைவரும் அறிந்தது, ஏனென்றால் காலை உணவு சாப்பிடுவதன் மூலம் தான் அன்றைய நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருப்போம். அதனால் நம்  வீட்டில் உள்ள பெரியவர்கள் காலை உணவை சாப்பிடாமல் இருக்காதீர்கள் என்று கூறுவார்கள். ஆனால் பலரும் வேலைக்கு செல்கின்ற அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் செல்கிறார்கள்.

இதனால் அன்றைய நாள் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. மேலும் காலையில் எழுந்ததும் டீ, காபி தான் அதிகமாக குடிக்கிறோம். அதன் பிறகு தான் உணவுகளை சாப்பிடுகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்வோம்.

டீ மற்றும் காபி:

Please Install JNews Themes To use JNews Gallery Shortcode Feature

காலையில் எழுந்ததும் பெரும்பாலானவர்கள் டீ, காபியை தான் குடிக்கிறார்கள். இதை நீங்கள் குடிப்பதால் வயிற்றில் உள்ள அமிலங்களை தூண்டுகிறது. தொடர்ந்து குடிப்பதால் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் செரிமான பிரச்சனையும் ஏற்படுத்தும்.

சோடா:

பலருக்கும் குளிர்ச்சி நிறைந்த ஐஸ் மற்றும் சோடாக்கள் சாப்பிடுவது பிடிக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. தொடர்ந்து குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் அமில தன்மை அதிகரித்து வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் நாளடைவில் புற்றுநோய் பிரச்சனையை ஏற்படுத்தும்.

காரமான உணவுகள்:

வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிட கூடாது, ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து காரமான உணவுகளை சாப்பிடும் போது வயிற்றில் எரிச்சல் பிரச்சனை, புண், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தயிர்:

வெறும் வயிற்றில் தயிர் போன்ற புளித்த பால் பொருட்களை உட்கொள்வதால், தயிரில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியாக்கள், வயிற்றில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் பயனற்றதாக இருக்கும். மேலும், அதிக அமில அளவு காரணமாக, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது, இது அமிலத்தன்மையைஅதிகரிக்கிறது .

மாத்திரைகள்:

நாம் அதிகமாக மாத்திரைகளை சாப்பிட கூடாது, அதிலும் நீங்கள் வெறும் வயிற்றில் தினமும் மாத்திரைகளைசாப்பிட்டால் வயிற்றில் புண்ணை ஏற்படுத்தும். நாளடைவில் புற்றுநோய் பிரச்சனையும் ஏற்படுத்தும்.

பழங்கள்:

கொய்யா மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் உங்கள் குடலில் அமில உற்பத்தியை அதிகரிக்கலாம், இரைப்பை அழற்சி மற்றும் இரைப்பை புண்களின் அபாயத்தை அதிகரிக்கும். அத்தகைய பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் நிறைந்திருப்பதால்  செரிமான அமைப்பை மெதுவாக்கும். அதனால் இந்த பழங்களை தவிர்த்து விடுங்கள்.

காய்கறிகள்:

காய்கறிகள் மதிய உணவிற்கு சிறந்ததாக இருக்கும், ஆனால் இதனை காலையில் எடுத்து கொண்டால் வாயு பிரச்சனை மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். முக்கியமாக தக்காளியில் டானிக் அமிலம் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் வயிற்று எரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

மினரல் வாட்டர் குடிக்கிறீங்களா கண்டிப்பா இதை படியுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

 

 

 

Advertisement