What Dialysis Patients Should not Eat in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் உடலில் ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் நம்மிடம் கூறுவார்கள். எனவே, அதன்படியே நாமும் உணவில் கவனம் செலுத்தி வருவோம். அந்த வகையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் பண்றவங்க என்னென்ன உணவுகள் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நம் உடலின் பல முக்கியமான செயல்களை செய்யும் சிறுநீரகம் செயலிழந்து விட்டால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். முறையான உணவு செரிமானமின்மை, இரத்தத்தை சுத்திகரிக்காமல் இருப்பது, கழிவு நீரை வெளியேற்றாமல் இருப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலை அதிகமாக நீடிக்கும்போது, டயாலிசிஸ் சிகிச்சை முறை பயன்படுகிறது. அப்படி, டயாலிசிஸ் பண்றவங்க உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Foods That Dialysis Patients Should Not Eat in Tamil:
துரித உணவு:
டயாலிசிஸ் நோயாளிகள் பாஸ்ட் ஃபுட் உணவுகளான பீட்சா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த வகையான உணவுகளில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது. இது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இதில் அதிக அளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது டயாலிசிஸ் பண்றவங்க தீங்கு விளைவிக்கக்கூடியது.
பால் பொருட்கள்:
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆகையால், இந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
டயாலிசிஸ் நோயாளிகளுக்கான உணவு முறை அட்டவணை
குளிர்பானங்கள்:
டயாலிசிஸ் பண்றவங்க குளிர்பானங்களை எடுத்துக்கொள்ள கூடாது. கார்பனேற்றப்பட்ட பானங்கள் அதிக அளவு பாஸ்போரிக் அமிலத்தைக் கொண்டிருப்பதால், சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவு:
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம், மோனோ சோடியம் குளுட்டமேட் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இவை சிறுநீரகங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும்.
இறைச்சி:
இறைச்சி வகைகளில் இறைச்சி உறுப்புகளான கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்பு இறைச்சிகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள்:
பழ வகைகளில் வாழைப்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ள கூடாது. இந்த பழங்களில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சிறுநீரகத்திற்கு தீங்கானது.
அதிகமான நீர்:
டயாலிசிஸ் நோயாளிகள் அதிகமாக தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்தினால் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. அதேபோல், ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க கூடாது.
டயாலிசிஸ் நோயாளிகள் தவிர்க்கவேண்டிய பிற பொருட்கள்:
- அடர் நிற சோடா
- முழு கோதுமை ரொட்டி
- பதப்படுத்தப்பட்ட உணவு
- வாழைப்பழங்கள்
- பால் பொருட்கள்
- ஊறுகாய்
- தக்காளி
- பழுப்பு அரிசி
- கொழுப்புநிறைந்த பழவகை
- விதைகள்
- ப்ரோக்கோலி
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |