Foods That Turn Poisonous After Eating in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக நாம் அனைவருமே அன்றாடம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் இன்றைய நிலையில் யாரும் அப்படி சத்தான உணவுகளை சாப்பிடுவது கிடையாது. துரித உணவுகளை தான் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் சத்தான உணவுகளை உண்டு நோய்கள் வராமல் 100 வயது வரை வாழ்ந்தார்கள்.
ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உணவாக உண்டு உயிர் வாழ்கிறோம். இதை தான் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்கிறார்கள். சரி அதை விடுங்க நண்பர்களே. இது நமக்கு தெரிந்த விஷயம் தானே. உங்களுக்கு தெரியுமா நாம் உண்ணும் சில உணவுகள் உண்ட பிறகு நஞ்சாக மாறுகிறது. அது என்ன உணவுகள் என்று இங்கு காணலாம்.
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் |
சாப்பிட பிறகு நஞ்சாக மாறும் உணவுகள்
மாவுகள்:
மாவு என்றதும் நம் நினைவிற்கு வருவது இட்லி மாவு தான். ஆனால் நாம் இன்று சொல்ல வருவது கோதுமை மாவை தான். நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோதுமை மாவில் மோசமான நுண்ணுயிரிகள் இருக்கலாம். அதனால் தான் எந்த ஒரு மாவையும் பச்சையாக சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுகிறது. இது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
முளைகட்டிய பயிர்கள்:
பொதுவாக முளைகட்டிய பயர்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. ஆனால் இவை வளர சூடான மற்றும் ஈரப்பதமான சூழல் தேவை. இதே சூழலில் நுண்ணுயிரிகளும் வேகமாக வளர்கின்றன. இதில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களும் இருக்கின்றன. அதுபோல முளை கட்டிய பயர்களை அதிக நேரம் ஈரமாக வைத்திருக்கக் கூடாது. மேலும் காற்றோட்டம் இல்லாத இடத்தில் அதிக நேரம் வைக்கக் கூடாது. இப்படி உருவாக்கிய பயிர்களை நாம் உண்ணம் போது அது நமக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
இரவு சாப்பாட்டில் இந்த 5 வகையான உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள் |
பச்சை முட்டைகள்:
பொதுவாக நம்மில் பலரும் பச்சை முட்டை குடிப்பவராக இருப்பார்கள். காரணம் பச்சை முட்டை குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. ஆனால் பச்சை முட்டையை விட வேகவைத்த முட்டைகள் சிறந்தது என்று கூறுகிறார்கள். பச்சை முட்டைகளில் சால்மோனெல்லா இருக்கலாம். சுத்தமாகவும் உடைக்கப்படாமலும் இருக்கும் முட்டைகளில் கூட இந்த நுண்ணுயிரிகள் இருக்கலாம். இது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
பால் பொருட்கள்:
பதப்படுத்தப்படாத பால் மற்றும் அந்த பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களும் சாப்பிட்ட பின் நஞ்சாக மாறுகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. ஏனென்றால் பச்சை பாலில் கேம்பிலோபாக்டர், கிரிப்டோஸ்போரிடியம், ஈ.கோலி, லிஸ்டீரியா, சால்மோனெல்லா போன்ற நுண்ணுயிரிகள் இருக்கிறது.
அதனால் நாம் பதப்படுத்தப்படாத பாலை கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், தயிர் போன்றவை நமக்கு தீங்கு விளைவிக்கிறது. மேலும் பாலில் உள்ள சத்துக்கள் அதை சூடாக்கும் போது பெரிய அளவில் அழிந்து போவதில்லை. அதனால் பாலை சூடாக்கி குடிப்பது நல்லது.
டீயுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் |
சுத்தமில்லாத காய்கறிகள்:
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. ஆனால் பச்சை காய்கறிகளில் சில நேரங்களில் சால்மோனெல்லா, ஈ.கோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. அவை நம் சமையலறையில் உள்ள மற்ற பொருட்களில் படிந்துள்ள நுண்ணுயிரிகளால் கூட மாசுபடலாம். அதனால் காய்கறிகளை எப்பொழுதும் சுத்தமாக கழுவிய பின் உணவாக உட்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |