சிக்கனுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் | Foods to Avoid After Eating Chicken in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிக்கனுடன் சாப்பிடும்போதும், சாப்பிட்ட பிறகும் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் (Foods to Avoid After Eating Chicken in Tamil) பற்றி பின்வருமாரு கொடுத்துள்ளோம். அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முதலாவதாக இருப்பது சிக்கன் தான். அதனால், சிக்கனில் செய்யப்பட்ட அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவோம்.
சிக்கன் சாப்பிட்ட பிறகு நாம் ஒரு சில உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆனால், இது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சிக்கன் சாப்பிட்ட பிறகு, பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால், அது உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, சிக்கனுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவு பொருட்கள் எது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொண்டு, முடிந்தவரை இந்த உணவு பொருட்களை சிக்கனுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
சிக்கனுடன் சாப்பிட கூடாத உணவுகள்:
மீன் வகைகள்:
சிக்கனிலும் புரதம் உள்ளது, மீனிலும் புரதம் உள்ளது. இவை இரண்டுமே வெவ்வேறு வகையான புரதங்கள். எனவே, இவை இரண்டினையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது, இவற்றில் உள்ள புரதங்கள் ஒன்றோடு ஒன்று வினை புரிந்து, உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
பால்:
சிக்கன் உணவுகளை சாப்பிட்ட பிறகு, பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும், பலபேருக்கு இரவில் பால் குடித்து விட்டு தூங்கும் பழக்கம் இருக்கும். இரவில் சிக்கன் உணவுகளை சாப்பிட்டால் பால் குடிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.
பழங்கள் மற்றும் பழச்சாறுகள்:
சிக்கன் சாப்பிட்ட பிறகு, எந்தவொரு பழங்களையும் உட்கொள்ளாதீர்கள். அதேபோல் பழச்சாறு குடிப்பதையும் தவிர்த்து கொள்ளுங்கள். இப்படி சிக்கனையும் பழங்களையும் சேர்த்து சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகும்.
தேன்:
சிக்கன் சாப்பிட்ட பிறகு, தேன் அல்லது தேன் சேர்க்கப்பட்டுள்ள உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேன் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுக்கும். எனவே, சிக்கன் சாப்பிட்ட பிறகு, தேன் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை உண்டாகும்.
தயிர்:
சிக்கன் சூடான உணவு (வெப்பத்தன்மையுள்ள உணவு), மறுபுறம் தயிர் குளிர்ச்சியான உணவு. இவை இரண்டினையும் ஒன்றாக சாப்பிடும்போது வயிறு உப்பசம், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். எனவே, சிக்கன் சாப்பிட்ட பிறகு தயிர் ஊற்றி சாப்பிடுவதையோ, லெஸி குடிப்பதையோ தவிர்க்க வேண்டும். தயிர் மட்டுமின்றி எந்தவொரு குளிர்பானங்களையும் குடிக்க கூடாது.
உருளைக்கிழங்கு:
சிக்கன் சாப்பிட்ட பிறகு, உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிக்கனில் அதிக அளவில் புரதம் உள்ளது. மறுபுறம் உருளைக்கிழங்கில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரண்டினையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் எது தெரியுமா?
கீரை வகைகள்:
சிக்கன் சாப்பிட்ட பிறகு, எந்தவொரு கீரை உணவுகளையும் உட்கொள்ள கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை உண்டுபண்ணும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |