வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காபியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

Updated On: January 20, 2024 4:50 PM
Follow Us:
Ghee Coffee Benefits in Tamil
---Advertisement---
Advertisement

நெய் காபியின் நன்மைகள் | Ghee Coffee Benefits in Tamil

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு காலையில் ஒரு சூடான காபி குடிப்பது மிகவும் பிடித்த விஷயமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அந்த நாளை சிறப்பாக தொடங்குவது போன்ற உணர்வு கிடைக்கும். ஆனால் அதை வெறும் காபியாக மட்டும் அருந்தாமல் அதில் ஒரு சில எளிய பொருட்களை சேர்ப்பது மூலமாக நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

பண்டைய காலம் தொட்டே நெய் என்பது நமது இந்திய உணவு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வகை தெளிவான வெண்ணெய் ஆகும்.  அதன்படி தினசரி காலையில் காபி குடிக்கும் போது அதில் கொஞ்சமாக நெய் சேர்த்து குடித்தால் எதுபோன்ற நன்மைகள் கிடைக்கும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடலில் ஆற்றல் அதிகரிக்கும்:

சாதாரணமான காபி குடிப்பதற்கு பதில் அதில் கொஞ்சம் நெய் சேர்த்து குடிக்கும்போது உடலுக்கு ஏராளமான ஆற்றல் கிடைக்கிறது. நெய்யில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள், நம் உடலுக்கு நீடித்த நிலையான ஆற்றலை வழங்கும். இது அந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 நாட்களில் சளி இருமலை சரி செய்யும் மூலிகை கஷாயம்

கூடுதல் சுவை:

நெய் சேர்க்கப்பட்ட காபி சாதாரண காபியை விட கூடுதல் சுவையாக இருக்கும். அதுவும் இந்த குளிர்காலத்திற்கு நெய் சேர்த்து காபி குடிக்கும் போது இதமாக இருக்கும். நீங்கள் உங்கள் காபியின் சுவையை அதிகரிக்க விரும்பினால் தாராளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைக்க உதவும்:

நெயில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய கொழுப்பு உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதன் மூலமாக செரிமானம் மேம்பட்டு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். காபியுடன் நெய் சேர்த்து பருகும் போது, அது பசியை குறைத்து நாம் அதிகமாக உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. எனவே நீங்கள் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால் இந்த நெய் காபி உங்களுக்கு உதவும்.

ஆரோக்கியமான கொழுப்பு கிடைக்கும்:

நம் உடலுக்கு தினசரி எந்த அளவுக்கு கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறதோ, அதேபோல ஆரோக்கியக் கொழுப்பும் அவசியமான ஒன்றாகும். நெய், ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 கொழுப்புச் சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது நம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

நெய் காபி செய்முறை:

வழக்கமான முறையில் காபி தயாரித்து, அதை ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கொண்டால் சுவையான நெய் காபி தயார். நெய்யின் அளவு நீங்கள் குடிக்க விரும்பும் காபியின் அளவைப்பொறுத்தது.

கீட்டோ டயட்டை கடைபிடிப்பவர்களுக்கு நெய் காபி பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளோடு, நெய் காபியை உணவில் சேர்த்துக்கொண்டு அதிக சத்துக்களை பெறவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நட்சத்திர பழம் பயன்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now