Goat Milk Soap Benefits in Tamil
முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்காக நாமும் பல குறிப்புகளை பயன்படுத்துகிறோம். அவை அனைத்துமே நீங்கள் பயன்படுத்தும் போது நல்ல பலனை கொடுத்தாலும் சிறிது நேரத்திற்கு மட்டும் தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளும். மேலும் நீங்கள் சோப், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவோம். இதனால் எந்த ரிசல்ட்டும் கொடுக்கவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அது என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..
ஆட்டுப்பால் சோப்பின் நன்மைகள்:
சருமத்தை மென்மையாக்க:
சோப்புகள் பொதுவாக பயன்படுத்தும் போது நம் சருமத்தில் உள்ள எண்ணெய்களை நீக்கி சருமத்தை இறுக்கமாக்குகிறது. ஆனால் ஆட்டுக்கால் சோப்பானது முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது.
வயதான தோற்றத்தை தடுக்கிறது:
வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆட்டுப் பால் ஒரு வயதான தோற்றம் வராமல் தடுக்கிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதங்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இவை முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பள்ளங்கள் போன்றவை வராமல் பாதுகாத்து முதுமை தோற்றம் வராமல் பாதுகாக்கிறது.
பரு வராமல் இருக்க:
ஆட்டுப்பால் சோப்பானது முதலில் பருக்களை ஏற்படுத்தும் பாக்ட்ரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால் முகத்தில் பருக்கள் ஏற்படாமல் அழகாக வைத்து கொள்கிறது.
கஸ்தூரி மஞ்சளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.!
சரும ஆரோக்கியம்:
ஆட்டுப்பாலில் வைட்டமின்கள் ஏ, பி1, பி6, பி12, சி, டி, ஈ, துத்தநாகம், தாமிரம், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளது. இந்த சத்துக்கள் நிறைந்த சோப்பானது முகத்தை ஒளிர செய்கிறது.
வறண்ட சருமம் அழகாக:
வறண்ட சருமத்திற்கு ஆட்டுக்கால் சோப்பானது மிகுந்த நன்மையை தருகிறது. ஆட்டுப்பால் சோப்பானது சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்கிறது.
தோலின் Ph அளவு:
ஆட்டுப்பால் சோப்பு தோலின் ph அளவை சமமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. இதில் கேபிரிலிக் அமிலம் என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இந்த அமிலமானது நமது தோலில் ஏற்படும் கிருமிகளின் தாக்குதலில் இருந்து தடுக்கிறது.
தோல் புற்றுநோய் வரமால் பாதுகாக்கிறது:
ஆட்டு பால் சோப்பில் நிறைய செலினியம் உள்ளது. இவை புரா ஊதா கதிர்களிலிருந்து பாதுகாத்து தோல் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்கிறது.
வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |