கொய்யாவின் நன்மைகளும் தீமைகளும்
நம் உணவு பழக்கங்களில் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றோம். அதைபோல் அதன் இலைகளையும் உணவாக பயன்படுத்துகின்றோம். அந்த உணவுகள் சில நேரங்களில் நமக்கு தீமை விளைவிக்கும் என்றால் ஆச்சரியம் தான். நாம் பயன்படுத்தும் இயற்கையான கீரை காய்கள் அவற்றை பயன்படுத்தும் முறையை பொருத்து நன்மையையும் தீமையும் நமக்கு சரியான விகிதத்தில் வழங்க கூடியது. அத வகையில் நம்முடைய முக்கிய உணவான கொய்யாவினை அதன் இலைகள், பழங்கள், பட்டைகள் வரை உணவாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறையை பொருத்தும் பயன்படுத்தும் நபரை பொருத்தும் நன்மைகளும் தீமைகளும் வேறுபாடும். நாம் இன்று கொய்யா இல்லயில் உள்ள நன்மை மற்றும் தீமைகளையும் அதனை பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
கொய்யாவின் நன்மைகளும் தீமைகளும்:
கொய்யவில் உள்ள ஊட்டச்சத்துகள்:
- வைட்டமின் சி
- இரும்பு
- கால்சியம்
- வைட்டமின் ஏ
- பொட்டாசியம்
கொய்யாவில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் மற்ற பழங்களை விட இதில் அதிக அளவில் உள்ளது.
கொய்யா இலை டீ எவ்வாறு செய்வது?
தேவையான பொருட்கள்:
- புதிய கொய்யா இலைகள்
- டீ தூள் – ½ தேக்கரண்டி
- தண்ணீர் – 1 ½ கப்
- தேன் (அ ) வெல்லம் -தேவையான அளவு
செய்முறை:
- புதிய கொய்யா இலைகளை எடுத்து, அதனை நன்றாக கழுவி கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில், 1 ½ கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- பின்னர் கொய்யா இலைகளை அதில் சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
நிறம் மற்றும் சுவைக்காக ½ தேக்கரண்டி டீ தூள் சேர்த்துக்கொள்ளலாம். - மேலும் 10 நிமிடம் கொதிக்க வைத்து தண்ணீர் ஊற்றி வடிகட்டவும்.
- கடைசியாக, தேன் அல்லது வெல்லத்தை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு:
கொய்யா இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதில் உள்ள வைட்டமின் சி பாக்டீரியவை எதிர்த்து போராட கூடியது. அதனால் சளி பிரச்சனைகள் சீக்கிரம் குணமாகும்.
வயிற்றுப்போக்கு சிகிச்சை:
வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கு கொய்யா இலை தேநீர் உதவும். இந்த வைத்திய முறை பாரம்பரிய முறை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த:
கொய்யா இலை தேநீரில் உள்ள பாலிபினால்கள் நமது உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சி, உணவில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள், உணவிற்கு பிறகு, கொய்யா இலை டீ குடிப்பது நல்லது. அது அவர்களின் உடலில் உள்ள தேவையற்ற சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
கொய்யா இலை டீ , இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்லது. பெண்களின் மாதவிடாய் காலத்திற்கு ஏற்ற உணவாக இருப்பது மட்டும் அல்லாமல், தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்த உதவுகிறது.
கொய்யா இலையில் உள்ள தீமைகள்:
கொய்யா இலை டீ சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
தீமைகள் பின்வருமாறு:
கொய்யா இலைச் சாறு அல்லது டீ சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
நீரிழிவு அல்லது இரத்த அழுத்த நோய்க்கன மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவர் அறிவுரைப் பெற்று கொய்யா இலையை பயன்படுத்துவது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொய்யா இலை டீ பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
சருமத்தில் மற்றும் தலையில் கொய்யா இலைகளை சாறாகவோ அல்லது கலவையாகவோ பயன்படுத்தும் போது சிலருக்கு அரிப்பு மற்றும் எரிச்சலை உருவாக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |