துளசி விதை சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள்.!

Advertisement

துளசி விதை நன்மைகள் – Health Benefits of Basil Seeds in Tamil

துளசி ஒரு மூலிகை செடி ஆகும், இது இந்தியா, இலக்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. துளசி குறிப்பாக சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மூலிகை செடிகைக்கும். மேலும் இந்த துளசி செடியை கடவுளுக்கு மாலையாக போடுவார்கள், பெருமாள் மற்றும் ஆஞ்சிநேயர் கோயிலுக்கு சென்றால் அங்கு துளசி இலை போட்டு தீர்த்தம் கொடுப்பார்கள். அவ்வளவு மகிமை இந்த துளசி இலைக்கு உள்ளது. துளசி இலையில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே போன்று துளசி விதைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பல இருக்கிறது. அந்த நன்மைகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Health Benefits of Thulasi Seeds in TamilHealth Benefits of Thulasi Seeds in Tamil

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை:

துளசியின் பைட்டோ கெமிக்கல்கள் வலுவான ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் அவை தோல், கல்லீரல் வாய்வழி மற்றும் நுரையீரல் புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

சளி இருமல்:

துளசி விதை சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுகிறது. ஆக இருமல் உடனே நிக்க துளசி விதை மற்றும் தேன் இரண்டியும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அருந்திவர நல்ல நிவாரணமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
யூரிக் ஆசிட் குறைப்பது எப்படி? யூரிக் அமிலம் குறைக்கும் உணவுகள்..!

எடை இழப்பு: 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு துளசி விதை ஒன்று போதும். நார்ச்சத்து மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் உள்ள துளசி விதையை நீங்கள் உட்கொள்ளும்போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உங்கள் எடையை மிக எளிதாக குறைக்க உதவும்.

நோய்யெதிப்பு சக்தி அதிகரிக்க:

துளசி வைட்டமின் சி மற்றும் துத்தநாகத்தின் நல்ல மூலப்பொருள் ஆகும். ஆக சக்தி வாய்ந்த ஆன்டிவைரஸ், புஞ்சை எதிர்ப்பு, மற்றும் பஃடீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனால் னாய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

சிறுநீரக கற்களை நீக்கும்:

சிறுநீரக கற்களுக்கு முக்கிய காரணமான அமில அளவை குறைக்க உதவுகிறது இந்த துளசி விதை.

இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது:

பொதுவாக மூலிகைகள் இரத்தத்தை சுத்திகரிக்க வல்லமை வாய்ந்தது. ஆக துளசியில் தேனீர் செய்து அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி செரிமான அமைப்பை சுத்தப்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.

சருமத்திற்கு சிறந்தது:

சருமத்தை ஏற்ப்படும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதுடன் இது முன்கூட்டியே வயதான தோற்றத்தையும் தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது:

துளசியில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தையும், இரத்த அழுத்தத்தையும் குறைகிறது.

மன அழுத்தத்தை குறைகிறது:

துளசி விதையில் Ocimumosides A மற்றும் B ஆகிய கலவைகள் உள்ளது. அவை மன அழுத்தத்தை குறைகின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொலஸ்ட்ராலை குறைக்க என்னஎன்னாவோ Try பண்ணியிருப்பிங்க. ஆன இத ட்ரை பண்ணிங்களா…

சுவாச கோளாறுகளை குணப்படுத்தும்:

துளசி சுவாச பிரச்சனைகளை குணப்படுத்துவதில் வல்லமை வாய்ந்தது, சுவாச மண்டலத்தை திறம்பட செய்லடுத்தும். ஆக துளசி இலை மற்றும் விதையை நீரில் போடு நன்றாக கொதிக்கவைத்து நீராவி பிடித்தால் சுவாச கோளாறுகள் நீங்கும்,

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

டைப் 3 சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த துளசி இலை மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம், எப்படி என்றால் துளசி இலையை தினமும் உட்கொண்டு வந்தால் வளர்ச்சி மாற்ற செயல்முறையை மேம்படுத்துகிறது. மற்றும் உடல் கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்புகளை செயலாக்க உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement