செம்பருத்தி பூ டீ நன்மைகள்
நாம் அன்றாடம் காலை அல்லது மாலை நேரங்களில் டீ மற்றும் காபி குடிப்பதை ஒரு வழக்கமாக வைத்து இருப்போம். அதிலும் குறிப்பாக டீ வகைகளில் சுக்கு டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, லெமன் மற்றும் கிரீன் டீ என இதுபோன்ற டீக்களை தான் அதிகமாக குடிப்போம். ஆனால் இத்தகைய டீக்களின் வகைகளில் செம்பருத்தி பூ டீயும் ஒன்றாக உள்ளது. நாம் யாரும் இந்த டீயினை அதிகமாக தெரிந்துக்கொள்ளாமல் இருப்பதால் இதனை அதிகமாக குடிப்பது இல்லை. அதனால் இன்று இத்தகைய டீயினை குடிப்பதனால் உடலில் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க…!
கிராம்பு டீ குடிப்பதால் உடலிற்கு இவ்வளவு நன்மைகளா
செம்பருத்தி பூ டீ சத்துக்கள்:
வைட்டமின் B3, வைட்டமின் B9, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், சோடியம், மாங்கனீசு, வெளிமம் மற்றும் கலோரிகள் போன பல வகையான சத்துக்களை உள்ளடக்கியது தான் செம்பருத்தி பூ டீ.
Hibiscus Tea Benefits:
- செம்பருத்தி பூ டீயினை நாம் தினமும் குடித்து வருவதன் மூலம் நம்முடைய உடலில் குளுக்கோஸ் அளவினை மிகவும் குறைக்கச் செய்கிறது. இவ்வாறு செய்வதனால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவானது படிப்படியாக குறைய செய்கிறது.
- அதேபோல் இந்த செம்பருத்தி டீயினை நாம் பருகுவதன் மூலம் நம்முடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் உடல் எடையினை கணிசமாக குறைய வைக்கிறது.
- செம்பருத்தி டீயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் நம்முடைய உடலில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது.
- அதுமட்டும் இல்லாமல் உடலில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த டீயினை குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தினை மிகவும் விரைவாக குறைப்பதற்கு பயன்படுகிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
- செம்பருத்தி பூ டீயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இது நம்முடைய உடலில் காணப்படும் வீக்கத்தினை குறைப்பதற்கு நன்மையினை அளிக்கிறது.
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் |
செம்பருத்தி பூ டீ தீமைகள்:
செம்பருத்தி டீ உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அதனை சரியான அளவில் பருகவில்லை என்றால் நமக்கு சில பக்க விளைவுகளை உண்டாக்கும்.
- வயிற்று வலி
- மலச்சிக்கல்
- வாயு பிரச்சனை
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் செம்பருத்தி டீ குடிப்பதனால் ஏற்படலாம்.
அதேபோல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த டீயினை குடிக்க கூடாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |