ரொம்ப ஒல்லியா இருக்கீங்கன்னு கவலைப்படாம கலோரி அதிகம் உள்ள இந்த உணவுகளை சாப்பிடுங்க..

Advertisement

High Calorie Foods in Tamil

உடல் எடை அதிகரிப்பது சவாலாக தான் இருக்கும், உடல் எடை குறைப்பதும் சவாலானதாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் கலோரி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்து சாப்புட்டால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் அதில் ஒரு குழப்பம் இருக்கும், எந்தெந்த உணவுகளில் கலோரிகள் அதிகம் இருக்கிறது, என்று தெரிந்திருக்காது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கலோரி அதிகம் உள்ள உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

கலோரி அதிகம் உள்ள உணவுகள்:

வேர்க்கடலை வெண்ணைய்:

கலோரி அதிகம் உள்ள உணவு வகைகள்

வேர்க்கடலை வெண்ணெய் உடல் எடை அதிகரிப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெயில் 91 கலோரிகள், 7 கிராம் புரதம், 16 கிராம் கொழுப்பு மற்றும் 7 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது.

வேர்க்கடலையில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மற்றும் சகிப்புத்தன்மையை உருவாக்கும் அனைத்து 20 அமினோ அமிலங்களும் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள்

கோழி:

100 கிராம் கோழி இறைச்சியில் 184 கலோரிகள் உள்ளது. அதனால் இதை எட்டியது கொள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

சால்மன் மீன்:

கலோரி அதிகம் உள்ள உணவு வகைகள்

100 கிராம் சால்மன் மீனில் 206 கலோரிகள் இருக்கிறது. அதனால் இந்த மீனையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம்.

வாழைப்பழம்:

வாழைப்பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம், புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட் போன்ற சத்துக்கள் இருக்கிறது. ஒரு நடுத்தர அளவிலான 118 கிராம் வாழைப்பழத்தில் 105 கலோரி ஆற்றலையும் 27 கிராம் கார்போஹைட்ரேட்டையும் வழங்குகிறது. வாழைப்பழத்தை ஒரு கிளாஸ் பாலுடன் சேர்த்து பாதாம் பவுடரையும் சேர்த்து மிக்ஸ் செய்து காலை உணவாக குடித்து வரலாம்.

கொண்டைக்கடலை:

கலோரி அதிகம் உள்ள உணவு வகைகள்

கொண்டக்கடலை உடல் எடை அதிகரிக்க சிறந்த உணவாக இருக்கிறது. இதில் கலோரிகள் மற்றும் புரோட்டின் அதிகமாக நிறைந்திருக்கிறது. அதனால் கொண்டைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

அரிசி மற்றும் தானிய வகைகள்:

100 கிராம் அரிசியில் 130 கிராம் கலோரிகள் இருக்கிறது, தானியங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை தினமும் எடுத்து கொள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

உடல் எடை 10 நாளில் கிடுகிடுவென குறைய புரதம் நிறைந்த உணவுகள்..!

அவகோடா பழம்:

கலோரி அதிகம் உள்ள உணவு வகைகள்

100 கிராம் அவகோடா பழத்தில் 160 கலோரிகளும், 15 கிராம் கொழுப்பும் இருக்கிறது. அதனால் இதை காலை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

தயிர்:

தயிர் எடை அதிகரிக்க உதவுகிறது. இவை கால்சியம் மாற்றம் புரதத்தால் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், எலும்புகளை பலமாக்கவும் உதவுகிறது. அதனால் தினமும் ஒரு கப் தயிர் எடுத்து கொள்ளவும்.

மேலும் பேரீட்சைப்பழம், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள்,பழங்கள் போன்றவற்றை தினமும் எடுத்து கொண்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement