கொட்டாவி வந்தால் என்ன செய்ய வேண்டும்
மனிதனாக பிறந்துவிட்டால் எல்லோருக்கும் தும்மல், இருமல், கொட்டாவி போன்று எல்லாம் வரும். அந்த வகையில் ஒரு சிலருக்கு ஒருமுறை அல்லது இருமுறை இல்லையென்றால் பலமுறை கொட்டாவி வருவது வழக்கமானது. இதுபோல ஒருமுறை அல்லது இருமுறை கொட்டாவி வருவது பிரச்சனை இல்லை. ஆனால் தொடர்ந்து கொட்டாவி வருவதை கவனிப்பது அவசியமாகும். அதிலும் கொட்டாவி வருவதன் மூலம் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாம். அதனால் இன்றைய பதிவில் கொட்டாவி வராமல் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பதிவை முழுமையாக படித்து பாருங்கள்.
கொட்டாவி வருவதற்கான காரணம்:
- மூளையின் பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு இருந்தால் அடிக்கடி கொட்டாவி வரும்.
- பக்க வாதம் உள்ளவர்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரும்
- மூளையின் தண்டு பகுதியில் புண்கள் ஏற்பட்டு இருந்தால் கொட்டாவி வரும்.
- கை மற்றும் கால்களில் வலி ஏற்படும் போது கொட்டாவி வரும்.
- மூளை பகுதியில் எரிச்சல் ஏற்படும் போது கொட்டாவி வரும்.
- அடிக்கடி மருந்து மாத்திரை சாப்பிடும் விளைவுகளாக உடல் சோர்வு ஏற்படும், அதிகமாக கொட்டாவி வரும்.
கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா
கொட்டாவி வருவதனால் ஆபத்துகள்:
- நம் அருகில் இருக்கும் நபர் கொட்டாவி விட்டால் அதுபோல நாமும் கொட்டாவி விடுவதனால் தொற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
- கொட்டாவி விடும் போது சத்தமாக கொட்டாவி ஏற்பட்டால் நுரையீரல் பிரச்சனையாக இருக்கலாம்.
- நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் சரியாக இல்லாதபோது கொட்டாவி அதிகமாக வரும்.
- உடல் கூட சோர்வு காரணத்தினாலும் கொட்டாவி வரும்.
கொட்டாவி வராமல் சுறுசுறுப்பாக இருக்க:
குறிப்பு: 1
முதலில் பாகு வெல்லத்தை இடித்து எடுத்து கொண்டு, அதனுடன் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலக்கி கொண்டு இருக்கவும். பின்பு அந்த வெல்லம் பாகுவில் எந்த விதமான அழுக்குகள் மற்றும் அசடுகள் இல்லாமல் இருக்க வடிகட்டி கொண்டு வடிகட்டவும். மறுபடியும் வடிகட்டி வைத்த வெல்லப் பாகுவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக காய்க்கவும். அது கெட்டியான பதம் வரும் வரை காய்த்து கொண்டு இருக்கவும். பிறகு அந்த வெல்லப்பாகு ஆறியதும், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் கொண்டு சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் வெளியே செல்லும் போது அதிகமாக கொட்டாவி வரும் நிலை ஏற்பட்டால், இந்த உருட்டி வைத்த வெல்லப் பாகுவை சாப்பிடுவதன் மூலம் கொட்டாவி வருவதை குறைத்து விடலாம்.
குறிப்பு: 2
முதலில் 2 டம்ளர் தண்ணீரை கொதிக்க விட்டு, அதனுடன் 1/4 ஓமம், 1/4 சீரகம், 1/4 சுக்கு பொடி, சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் . இந்த 2 டம்ளர் தண்ணீரை 1 டம்ளராக வரும் வரை கொதிக்க விடவும். அந்த தண்ணீர் ஆறியதும் அதனை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டவும். இந்த தண்ணீரை தினமும் 2 முறை குடிப்பதன் மூலம் உடம்பு வலி, இரத்தசோகை, உடல் சோர்வு வராமல் இருக்கும், அதுமட்டுமில்லாமல் கொட்டாவி வருவதை குறைத்து விடும்.
கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |