Home Remedy for Dry Cough in Tamil
இன்றைய காலகட்டத்தில் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் வெப்பம் போன்றவற்றால் நமது உடலுக்கு பலவகையான உடல்நல குறைபாடு ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக குளிர்காலம் வந்துவிட்டாலே நமக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனை அதிகரிக்கிறது. அதிலும் வறட்டு இருமல் மிகவும் ஆபத்தானது. தொண்டையில் கடுமையான வலியையும் ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் தொண்டையில் படிப்படியாக அரிப்பு அதிகரிக்கும். இதனால் நமக்கும் நமது உடல்நலத்திற்கு சிரமம் ஏற்படும். எனவே அதனை போக்குவதற்கு உதவும் சில எளிமையான வீட்டு வைத்தியத்தை இன்று பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
2 வாரத்திற்கு சர்க்கரை இல்லாத உணவை சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா உயிருக்கே ஆபத்தா
வறட்டு இருமல் குணமாக பாட்டி வைத்தியம்:
பொதுவாக நமக்கு வறட்டு இருமல் ஏற்பட்டது என்றால் நாம் உடனடியாக ஏதாவது ஒரு இருமல் மருந்தினை வாங்கி பருகுவோம். அப்படி செய்வதால் சில மணிநேரத்திற்கு மட்டுமே தீர்வு கிடைக்கும்.
ஆனால் நிரந்தரமாக வறட்டு இருமலை போக்க வேண்டும் என்றால் அதற்கு நமது பாட்டி வைத்தியம் மிகவும் கை கொடுக்கும். நமது பாட்டி வைத்தியம் சளி மற்றும் இருமலைப் போக்க மருந்துகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே சில பாட்டி வைத்திய குறிப்புகளை இங்கு விரிவாக காணலாம் வாங்க.
மஞ்சள்:
மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவருக்குமே தெரியும் எனவே மஞ்சள் இருமலில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. அதாவது வறட்டு இருமலுக்கு மஞ்சள் பால் குடிப்பது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மஞ்சளை சிறிது சூடாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். அதுவும் சிறந்த பலனை அளிக்கும்.
புளுபெர்ரி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
தண்ணீர் மற்றும் உப்பு:
பொதுவாக உப்பு கலந்த வெதுவெதுப்ப்பான நீரில் வாய் கொப்பளிப்பது இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அதிலும் குறிப்பாக வறட்டு இருமல் காரணமாக தொண்டையில் கடுமையான வலி மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற பிரச்சனையும் இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது பாக்டீரியாவை நீக்கி இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது.
கருமிளகு:
கருப்பு மிளகு இருமலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் உள்ள சத்துக்கள் வறட்டு இருமலை நீக்க உதவுகிறது. கருப்பு மிளகை தேன் அல்லது கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடுவதால் சளி, இருமல் மற்றும் வறட்டு இருமல் நீங்கும்.
தேன்:
பொதுவாகவே தேன் இருமலுக்கு சிறந்த தீர்வை அளிக்கும். அதனை எலுமிச்சம்பழத்துடன் கலந்து குடிப்பதால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அதேபோல் சூடான பால கலக்காத தேநீரில் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை நீங்கும்.
இஞ்சி:
இருமலுக்கு இஞ்சி நன்மை பயக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருமலை போக்க உதவுகிறது. இருமலுக்கு இஞ்சி கஷாயம் மிகவும் நன்மை பயக்கும். இது தொண்டை எரிச்சல் மற்றும் வலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.
பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
சித்தரத்தை:
ஆயர்வேதத்தில் சித்தரத்தை இருமல் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இருமல், சளி போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
அதேபோல் சித்தரத்தை கஷாயத்தைக் குடித்தவுடன் வறட்டு இருமல் குணமாகும் என்று கூறப்படுகிறது.
பூண்டு:
பூண்டில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நமக்கு நன்றாக தெரியும். பூண்டு சாப்பிட்டால் இருமல் குணமாகும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆம் நண்பர்களே பூண்டு பற்களை வெதுவெதுப்பான பாலுடன் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் இப்படியெல்லாம் கூட நடக்குமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |