நாக்கு வறட்சி நீங்க
இன்றைய காலத்தில் பல பேருக்கு நாக்கில் வறட்சி தன்மை ஏற்படுகிறது. நமது நாக்கில் உமிழ் நீர் சுரக்கவில்லை எனில் பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. இது குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஓட்டப்பந்தயத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. நாக்கில் வறட்சி சுமார் 70 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. நாக்கில் வறட்சியை தடுப்பதற்கு இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
நாக்கில் வறட்சி வர காரணம் :
- நம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பது இல்லை.
2.அதிக அளவு மாத்திரைகளை சாப்பிடும் நபருக்கு நாக்கில் வறட்சி ஏற்படும்.
3. இரவில் தூங்கும் போது வாயை திறந்து வாய் வழியே மூச்சி விடுபவருக்கும் நாக்கில் வறட்சி உண்டாகும்.
4. புற்று நோய்க்கு சிகிக்சை பெறுபவர்களுக்கு வறட்சி தன்மை உண்டாகும்.
நாக்கு புற்றுநோய் அறிகுறிகள் | Tongue Cancer Symptoms in tamil
குறிப்பு : 1
முதலில் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் எடுத்து கொள்ளவும். பிறகு சீரகத்தின் மேல் எலுமிச்சை பழ சாற்றை நனைத்து விடவும், இதனை 10 நிமிடம் ஊற வைக்கவும். இதனை வாயில் போட்டு மென்று அதன் சாற்றை குடித்து விட்டு, அதன் சக்கையை வெளியே துப்பி விட வேண்டும். இதனை தினமும் 4 முறை செய்வதனால் நாக்கில் வறட்சி ஏற்படுவதை தடுத்து விடலாம்.
குறிப்பு : 2
முதலில் வெட்டி வேர் கட் பண்ணி எடுத்து கொள்ளவும். பிறகு அதனை 1 டம்ளர் தண்ணீரில் வெட்டி வைத்த வேர்களை போடவும். அதனை இரவு முழுவதும் அந்த தண்ணீரை ஊற வைக்கவும். இதனை மறுநாள் எடுத்து குடிக்கவும். இதை வாரத்திற்கு 1 ஒரு முறை செய்வதனால் நாக்கில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
குழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா ?
குறிப்பு : 3
முதலில் கற்றாழை உள்ள ஜெல்லை எடுத்து கொள்ளவும். இதனை காலை வேலையில் சிறிதளவு வாயில் போட்டு கொஞ்சம் நேரம் அப்படியே வாயில் வைத்து மென்று சாப்பிட வேண்டும். இதனை தினமும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதால் வாயில் உமிழ் நீர் சுரக்க தொடங்கி வறட்சியை வருவதை குறைத்து விடும்.
குறிப்பு : 4
முதலில் புளிய கொழுந்தை எடுத்து கொள்ளவும். பிறகு புளிய கொழுந்தினை கசக்கி கொள்ளவும். அதனை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். இதில் புளிப்பு மற்றும் துவர்ப்பு இரண்டுமே இருப்பதால் அது உமிழ் நீர் சுரப்பை தொடங்கி வறட்சியை நீக்கி விடும்.
குறிப்பு : 5
முதலில் நெல்லிக்காயை எடுத்து கொள்ளவும். இதனை சிறிதளவு வாயில் வைத்து அதன் சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் போது, நமது உடலில் திரவ தன்மை அதிகமாகும். அதுமட்டுமில்லாமல் உமிழ் நீரை சுரக்கும் தன்மை ஆரம்பிக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |