ஒரு நாளைக்கு எவ்வளவு தூங்க வேண்டும்
மனிதனாக பிறந்த அனைவருமே பணம் வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறார்கள். அப்படி உழைக்கும் பொது சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, சரியான நேரத்திற்கு உறங்குவதில்லை. இதனால் உடலில் பல பிரச்சனை ஏற்படும். சில பேருக்கு உடலில் பல பிரச்சனை ஏற்படுகிறது, அவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல் அதற்கான தீர்வை காண்பார்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதற்கு முன் நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமானது. அது போல நேரத்திர்க்கு தூங்க வேண்டும். இந்த பதிவில் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
தூங்குவதற்கு சிறந்த நேரம்:
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போனை பார்த்து கொண்டே இருப்பதால் இரவில் தூங்க மாட்டிக்கிறார்கள். அப்படியே தூங்கினாலும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல மாட்டிக்கிறார்கள். நீங்கள் 12 மணிக்கு தூங்க ஆரம்பித்தால் எப்படி தூக்கம் வரும். முதலில் தூங்குவதற்கு `1/2 மணி நேரம் முன்பு போனை பார்க்காமல் இருந்தாலே தூக்கம் வரும்.
அப்படி நீங்கள் இரவில் தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறந்த நேரமாக இருக்கிறது.
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
நேரம் கழித்து தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
எடை அதிகரிக்கும்:
நீங்கள் நேரம் கழித்து தூங்கினால் சாப்பிடும் உணவு பொருட்கள் நேரம் கழித்து செரிமானமாகும். இதனால் நீங்கள் உணவை குறைத்து சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும்.
இதய நோய்:
6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபர்களுக்கு இதயம் சம்மந்தப்ட்ட பிரச்சனை ஏற்படும்.
மன அழுத்தம்:
நீங்கள் தினமும் சரியான நேரத்திற்கு தூங்காம இருப்பது மன சோர்வை ஏற்படுத்தும், மேலும் மன அழுத்தம் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தினமும் 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது.
ஞாபக மறதி:
உடலுக்கு தேவையான தூக்கம் கிடைக்காததால் மூளையானது சோர்வடையும். இதனால் ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுகிறது.
தோல் பிரச்சனை:
சரியாக தூங்கவில்லை என்றால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். கருவளையம் பிரச்சனை ஏற்படும். மேலும் தோலில் சுருக்கம் காணப்படும்.
தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |