Themal Treatment at Home in Tamil | வெள்ளை தேமல் மறைய
தேமல் என்பது உடலில் கழுத்து, முகம், மார்பு, முதுகு மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் ஒரு நோய் ஆகும். தேமல் அதிகமாகவும் அடிக்கடியும் வருவதற்கு முதல் காரணம் வியர்வை ஆகும். எனவே வியர்வை அதிக சுரப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தேமல் அடிக்கடி வரும். எனவே இதனை தடுக்க மருத்துவரிடம் சென்று ஆயில்மெண்ட், மாத்திரை போன்றவற்றை எடுத்து வருவோம்.
ஆனால் இம்மருந்துகள் பயன்படுத்தும் வரை தேமல் மறைந்தது போல் தெரியும். பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, தேமல் மீண்டும் வர தொடங்கும். எனவே, இயற்கையான பொருட்களை பயன்படுத்தி அதாவது நம் முன்னோர்கள் தேமலை சரிசெய்ய பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தி ஒரே வாரத்தில் தேமலை எப்படி போக்குவது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
தோல் நோய்க்கு சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!
How To Cure Themal Naturally in Tamil:
தேவையான பொருட்கள்:
- வசம்பு பொடி – 1 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்
- முதலில் ஒரு கிண்ணத்தில் வசம்பு பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள்.
- இதனை தேமல் முகத்தில் தேமல் உள்ள இடத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு அதன் பிறகு, சுத்தமான தண்ணீர் கொண்டு நன்கு கழுவி விடுங்கள்.
- இவ்வாறு நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தேமல் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
தேமல் மறைய டிப்ஸ்:
- ஆடா தொடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு ஒரு வாரம் வெயில் காயவைத்து, அதன் பிறகு, தேமல் உள்ள இடத்தில தடவி வந்தால் தேமல் எளிதில் மறையும்.
- ஒரு துண்டு வசம்பு மற்றும் பூவராம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் தூங்கும்போது பற்றுப்போட்டு வந்தால் தேமல் நாளைடைவில் மறைந்து விடும்.
- தயிரில் மஞ்சள் கலந்து தேமல் உள்ள இடங்களில் போட்டு வந்தால் தேமல் எளிதில் நீங்கிவிடும்.
ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |