மாதவிடாய் வர என்ன சாப்பிட வேண்டும்?

Advertisement

தடைபட்ட மாதவிடாய் வர – How to get your period overnight in tamil

மாதவிடாய் அல்லது மாதவிலக்கு என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். பெருமைப்பாலும் இந்த மாதவிடாயின் நாட்கள் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். இந்த நாட்களில் பெண்கள் படும் பாடினை வெறும் வார்த்தையால் சொல்லிவிட முடியாது. அதிலும் ஏதாவது விழா நாட்களில் வந்தால் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. விசேஷ நாட்களில் மாதவிடல் வரக்கூடாது என்று பலர் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். மாத்திரைகளை பயன்படுத்தினால் உங்கள் உடலுக்கு தான் பாதிப்பு ஏற்படும் ஆக பாதுகாப்பான முறையை பின்பற்றுவது தான் மிகவும் சிறந்த தீர்வு. ஆக உங்களுக்கு மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கு சில எளிய வழிகளை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

மாதவிடாய் சீக்கிரம் வருவதற்கு என்ன செய்வது – Irregular Periods Treatment in Tamil

அன்னாசிப்பழம்:அன்னாசிப்பழம்

பொதுவாக அன்னாசிப்பழம் உடலுக்கு உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய பண்புகளை கொண்டது ஆக உங்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் வர வேண்டும் என்றால் அன்னாசிப்பழத்தை சாப்பிடலாம், இந்தனை சாப்பிட்டால் உங்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் வந்துவிடும்.

பப்பாளி:

பப்பாளியும் உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது மற்றும் இவற்றில் ஏராளமான சத்துக்களும் உள்ளது உடலில் நன்மை தரக்குடையது. இந்த பப்பாளி பழத்தை தினமும் ஒரு ஐந்து துண்டுகள் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் வந்துவிடும்.

எள்ளு:எள்ளு

மாதவிடாய் சீக்கிரம் வர வேண்டும் என்று விரும்புபவர்கள் கருப்பு எள்ளினை ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். வெறும் கருப்பு எள்ளினை மட்டும் சாப்பிட உங்களுக்கு பிடிக்காது என்றால் அதற்கு பதிலாக நீங்கள் எள்ளு மிட்டாய் வாங்கி சாப்பிடலாம். இதனை சாப்பிட்டாலும் உங்களுக்கு வெகு சீக்கிரமாகவே மாதவிடாய் வந்துவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..!

மாதுளை பழம் அல்லது ஜூஸ்:மாதுளை பழம்

மாதுளை பழம் அல்லது ஜூஸ் இரண்டும் மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கு உதவுகிறது. ஆக உங்கள் வழக்கமான மாதவிடாய் தேதிக்கு முன்னதாக ஒரு 10 நாட்களுக்கு முன்னதாகவே இந்த மாதுளைப்பழம் அல்லது அதனுடைய ஜூஸினை தினமும் பருகிவருங்கள். சீக்கிரமாகவே உங்களுக்கு மாதவிடாய் வந்துவிடும்.

பேரிச்சை பழம்:

பேரிச்சை பழமும் உடனடியாக மாதவிடாய் வரவழைக்க உதவுகிறது. ஒரு நாளுக்கு ஒரு ஐந்து பேரிச்சை பழத்தை சாப்பிடுங்கள் நிச்சயமாக உங்களுக்கு சீக்கிரம் மாதவிலக்கு வந்துவிடும்.

ஸ்வீட்ஸ்:

உங்களுக்கு சீக்கிரம் பீரியட்ஸ் வர வேண்டும் என்றால் தினமும் அதிகமாக ஸ்வீட்ஸ் அதிகமாக சாப்பிடுங்கள். ஸ்வீட்ஸ் அதிகமாக சாப்பிட்டால் சீக்கிரமாகவே மாதவிடாய் வந்துவிடினும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது?

குறிப்பு:

உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் மருத்துவரிடம் சென்று கர்ப்பபரிசோதனை செய்து பாருங்கள் ஒரு வேளை நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. ஆக நீங்கள் இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸினை பாலோ செய்ய வேண்டாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement