How to Improve Brain Power.?
நம் உடலில் சக்தி வாய்ந்த உறுப்பு மற்றும் விலை மதிக்க முடியாத உறுப்பு மூளை. நமது வாழ்கையில் ஏற்படும் வெற்றி மற்றும் தோல்வியே நிர்ணயிப்பதும் நமது மூளை தான். நாம் உயிர்ப்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ, நாம் நமது மூளையை எவ்வாறு பாதுகாக்கின்றோம், என்பது அதி முக்கியம். உங்கள் மூளை நன்றாக செயல் பட்டால் தான் நீங்கள் நல்ல முடிவை எடுக்க முடியும். நல்ல முடிவு எடுக்கும் போது சுலபமாக வாழ்க்கையை வெல்ல முடியும். நாம் நமது வாழ்க்கையில் வெற்றி பெற எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதற்கு நமது மூளையின் திறனை அதிகரிக்க வேண்டும். நாம் நமது IQ பவரை அதிகரிக்க நிறைய மூளை சார்த்த விளையாட்டுகள் உள்ளன. ஆனால் அந்த விளையாட்டுகளில் நமது மூளை மெருகேற்றுவதை விட அதை விட எளிதான பயிற்சிகளால் நமது மூளையின் IQ திறனை அதிகரிக்க செய்யலாம். நமது மூளையின் திறனை அதிகரிக்க எளிமையான வழிமுறைகள் உங்களுக்காக இதோ….
1. உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வதால் உங்களது உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த அளவு சீராக இருப்பதால் உங்களது மனத்திறன் அதிகரிக்கும்.
2. உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்தவும்
உங்களது உணவு பழக்கத்தில் அதிக காய்கள் மற்றும் பழ வகைகள் சேர்ப்பதன் மூலம் மூளைக்கு தேவையான flavonoids மற்றும் antioxidants கிடைக்கின்றது. இது மூளை செல்களை தூண்டுகின்றது.
இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் செயல்பட யோகாசனம்..!
3. சூரிய ஒளி
நமது உடலுக்கு தேவையான சக்தியே தினமும் 2 முதல் 5 நிமிடங்கள் சூரிய ஒளியே பெறுவதன் மூலம் நமது மூளை புத்துணர்ச்சி அடையும். ஒருவர், சுமார் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதால் வைட்டமின் டி உற்பத்தி ஆகிறது. மற்றும் செரோடோனின் உற்பத்தியையும் தூண்டுகிறது
4. நிம்மதியான தூக்கம்
நமது மூளை திறன்பட செயல்பட தூக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான தூக்கம் நரம்பு செல் தொடர்புகளை ஒழுங்குபடுத்தி மூளை செயல்படுகளை மேம்படுத்துகிறது.
உங்களுக்கு இன்சோம்னியா நோய் பற்றி தெரியமா..?
5. யோகா
யோகா மற்றும் தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் ஒரு நபரை ஒருமுகப்படுத்துகிறது. நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலையும் மேம்படுத்துகிறது. இது ஒரு நபரை முழுவதும் அமைதியாக வைத்திருக்கிறது மற்றும் மூளையின் சக்தியை மேம்படுத்துகிறது.
6. புகையிலை தவிர்க்கவும்
புகையிலை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது மற்றும் மூளையின் செயல்பாடுகளையும் குறைக்கிறது. புகையிலை சிந்திக்கும் திறன் மற்றும் கற்றல் குறைவதற்கு வழிவகுக்கிறது.
இதுபோல் இன்னும் பல வழிகளில் நம் மூளையை திறம்பட செயல்பட செய்து நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |