மார்பக புற்றுநோய் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Advertisement

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏதாவது ஒரு நோய் வருகிறது. அதற்கு நம் கடைகளில் விற்கும் மாத்திரை மற்றும் மருந்துகளை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அதில் ஒரு சில நோய்கள் சரியாகி விடும். அதைவிட பெரிய விதமான நோயாக இருந்தால் அதனை சரி செய்வது மிகவும் கடினமானது ஆகும். அதனால் எதையும் நாம் வருமுன் காப்பதே சிறந்தது. அந்த வகையில் மார்பக புற்றுநோய் வராமல் இருக்க கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மது அருந்துவதை குறைக்கவும்:

பெண்களுக்கு அதிகம் மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருப்பது மது ஆகும். மார்பக புற்றுநோய் இருப்பவர்கள் சிறிதளவு மது குடித்தாலும் அது அவர்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து கிளாஸ் மது குடிக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் உள்ளது.

நோனி பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா

உடல் எடை பராமரிப்பு: 

 மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

நமது உடல் எடை  பராமரிப்பு அவசியம் ஆகும். அதிலும் உடல் எடையில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. அதுமட்டுமில்லாமல் நம் உடல் எடையை குறைக்க நினைத்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்க வேண்டும்.

சுறு சுறுப்பாக இருக்கவும்:

உடல் ஆற்றல் அதிகரிக்க

நமது உடலை எப்பொழுதும் சுறு சுறுப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் சுறு  சுறுப்பாக வைத்து கொள்வதன் மூலம் ஓரளவாவது மார்பக புற்றுநோய் வருவதை தடுக்க இயலும். அதுமட்டுமில்லாமல் வாரத்தில் 150 நிமிடமாவது ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதனால் நமது உடலை சுறு சுறுப்பாக வைத்து கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்: 

 மார்பக புற்றுநோய் குணமாக

மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு தாய்ப்பால் மிகவும் முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதை சுலபமாக தடுத்து விடலாம்.

சேப்பக்கிழங்கினை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா. அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி 

மாதவிடாய் பிரச்சனைகள்: 

 மார்பக புற்றுநோய் குணமாக

ஹார்மோன் சிகிக்சை பெறும் நபராக இருந்தால் மார்பக புற்றுநோய் வேகமாக பரவும். அதிலும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளவர்கள் மருத்துவரிடம் சென்று அபாயங்கள் மற்றும் நன்மைகளை பற்றி ஆலோசனை கேட்பது நல்லது. ஏனெனில் மருந்துகள் அல்லது சிகிக்சை மூலம் இதனை கட்டுப்படுத்தி விடலாம்.

உணவு முறைகள்: 

 cure breast cancer with food in tamil

நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுவதனால் மூலம் மார்பக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய் வருவதை தடுக்கலாம். ஆலிவ் எண்ணெய் மற்றும் கொட்டைகள் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வராமல் தடுத்து விடலாம். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள் போன்ற சைவ உணவுகளை  சாப்பிடுவது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement