தாய்ப்பால் வற்ற என்ன செய்ய வேண்டும்?

Advertisement

How to Stop Breastfeeding After 2 Years in Tamil

தாய்ப்பால் என்பது ஒரு குழந்தைக்கு வருங்கால ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். ஆக தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு முடித்த அளவு அதிகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு அதிகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் என்பது சுரக்காது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு என்பது அதிகமாக இருக்கும். அவர்கள் தாய்ப்பாலை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு தாய்ப்பால் என்பது சுரந்துகொண்டே இருக்கும். அவர்கள் தாய்ப்பாலை வற்ற வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

ஆக தாய்ப்பாலை வற்ற வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும் அவர்கள் மிக எளிதாக தாய்ப்பாலை வற்ற வைத்துவிடலாம் சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து, குறிப்பை தெரிந்துகொள்வோம்.

Dry Up Breast Milk in Tamil

துவரம்பருப்பை பன்னீர் கலந்து அரைத்து அதனை பற்று போட்டால் தாய்ப்பால் சுரப்பு என்பது குறைய ஆரம்பிக்கும்.

தேங்காய் பூவை வதக்கி அதனை சூடு பொறுக்கும் அளவில் எடுத்து அதனை மார்பில் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நின்றுவிடும்.

மல்லிப்பூவை அடிக்கடி மார்பில் கட்டி வரவும், இவ்வாறு செய்து வருவதன் மூலம் தாய்ப்பால் வற்ற ஆரம்பிக்கும்.

வேப்பிலையை மார்பில் வைத்து கட்டினால் பால் வற்றிவிடும்.

முட்டைகோஸை பொடிப்பொடியாக நறுக்கி அதனை மார்பில் வைத்து கட்டிக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பது நின்றுவிடும்.

வாழைப் பிஞ்சை அரைத்து மார்பில் பற்று போட்டு வந்தால் பால் சுரப்பது நின்றுவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தாய்ப்பால் எத்தனை வயது வரை கொடுக்கலாம்?

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement