ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க நெல்லிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்..!

Advertisement

How To Use Amla For Weight Loss in Tamil

இக்காலத்தில் நாம் உட்கொள்ளும் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவுகளால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்கி விடுகின்றன. இது நாளடைவில் உடல் பருமன் உண்டாக காரணமாக அமைகிறது. இதனால் உடல் எடையை குறைக்க முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள். இதற்காக பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நெல்லிக்காய் பயன்படுத்துங்கள். உங்கள் உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்று போதும். வாருங்கள் இதனை பயன்படுத்தினால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

How To Eat Amla For Weight Loss in Tamil:

 how to take amla for weight loss in tamil

 

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல் நெல்லிக்காயில் நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், டானின்கள், பாலிபினால்கள், நார்ச்சத்துக்கள், ஹைப்போலி பிடெமிக் போன்ற சத்துக்களும் உள்ளது. இது நம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா..?

பொதுவாக நாம் அனைவருமே நெல்லிக்காயல் ஊறுகாய் செய்து சாப்பிடுவது, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது போன்றவற்றை செய்வோம். ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயில் ஜூஸ் செய்து சாப்பிட வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்.?

இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து அதன் சாற்றினை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

இதனை நீங்கள் அப்படியே குடிக்கலாம் அல்லது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம். மேலும், உங்களுக்கு விருப்பமானால் இதில் தேன் கலந்து குடிக்கலாம்.

 how to eat amla for weight loss in tamil

காலையில் தினமும் வெறும் வயிற்றில் இந்த நெல்லிக்காய் ஜூஸை குடித்துவருவதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். அதுமட்டுமில்லாமல் இதனை நீங்கள் பயன்படுத்திய ஒரு வாரத்திலேயே உங்கள் உடல் எடை குறைந்து இருப்பதை உங்களால் உணர முடியும்.

நெல்லிக்காய் எப்படி உடல் எடையை குறைக்கிறது..?

நெல்லிக்காயில் உள்ள ஹப்போலிபிடெமிக் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கொழுப்போடு தொடர்புடைய பண்புகளை எதிர்த்து போராடுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பானது எளிதில் கரைந்து விடுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு கருப்பு உப்பு சிறந்ததா..? வெள்ளை உப்பு சிறந்ததா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement