தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் போதும்… 30 நாட்களில் உடல் எடை குறையும்..!

Advertisement

How To Use Coconut oil Weight Loss in Tamil

இக்காலத்தில் உள்ள உணவுமுறைகளால் வயிற்றில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமில்லாமல், சாப்பிட்டு விட்டு ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பிடித்த உடையினை அணிய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதற்காக உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று பல்வேறு முறைகளை கையாளுகிறார்கள். முக்கியமாக சாப்பிடாமல் இருக்கிறார்கள்.. எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் உடல் எடையை குறைக்கக்கூடிய எளிமையான ஒரு பொருளை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

Coconut Oil For Weight Loss in Tamil:

Coconut Oil For Weight Loss in Tamil

உடல் எடையை எளிதில் குறைப்பதற்கு நாம் பயன்படுத்தும் பொருள் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மற்றும் தலைமுடிக்கு பயன்படுவதை போன்று உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது. அது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள். அதற்கான விவரங்களை பார்க்கலாம் வாங்க.

தேங்காய் எண்ணெயில் குறைந்த அளவிலான கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை நீக்கி உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகிக்கிறது.

உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்?

பயன்படுத்தும் முறை 1:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக குடிக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை 2:

1 டீஸ்பூன் வெர்ஜின் தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் 30 நாட்களில் உடல் எடை குறைய தொடங்கும்.

பயன்படுத்தும் முறை 3:

சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை எடுத்து கொள்வதன் மூலம் உடல் கொழுப்பை வேகமாக குறைக்கலாம். மேலும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை 4:

தினமும் 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் விரைவில் உடலில் உள்ள கொழுப்பு குறையும். இதன் மூலம் 120 கலோரிகள் வரை குறையும். மேலும் இது உடலிற்கு தேவையான ஆற்றலை அளித்து உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது.

மேலே கூறியுள்ள முறைகளில் உங்களுக்கு விருப்பமான முறையை தேர்வு செய்து தொடர்ந்து 30 நாட்கள் உட்கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

கருஞ்சீரகம் ஆயிலிலில் இவ்வளவு இருக்கா. இத்தனை நாளா தெரியாம போச்சே..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement