முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? – Is it good to eat eggs? Is it bad?
நண்பர்களுக்கு வணக்கம்.. உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது.
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. இத்தகைய ஆரோக்கியத்திற்கு உகந்த முட்டையை சாப்பிடுவத்தினால் மாரடைப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது அதுகுறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
முட்டை ஆரோக்கிமானதா? தீங்கானதா?
அமெரிக்க இருதய மருத்துவர்கள் கூட்டமைப்பு 1880-களில் முட்டை சாப்பிடுவதினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒரு அறிவிப்பைவிடுத்தது. அது குறிப்பன மேலும் செய்தி குறிப்புகளை இங்கு நாம் காணலாம் வாங்க.
1880-களில் முட்டை சாப்பிடுவதினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்ட மருத்துவர்கள். பின்னர் ஆராட்சிகள் மூலம் முட்டை சாப்பிடுவதினால் அவ்வாறான அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் தங்களின் ஆராட்சி முடிவுகளை தந்துள்ளனர்.
முட்டையில் 180 மில்லிகிராம் கொழுப்பு சத்து காணப்படுகிறது. ஆனால் 6 கிராம் புரதம் சத்து நிறைந்துள்ளது. புரதத்தின் புரதான வளமாகவே முட்டை கருதப்படுகிறது. சாதாரண ஒரு நபர் ஒரு நாளுக்கு இரண்டு இருந்து மூன்று முட்டைகள் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
இதைய பிரச்சனை உள்ளவர்கள் தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்பு குறையுமாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெண்டைக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்ன..?
முட்டையானது உடலில் FCL என்னும் அமிலத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்குமாம். முட்டையானது உடல் எடையை குறைகிறது. அதாவது முட்டையில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையும் குறையுமாம்.
முட்டையில் உள்ள லுட்டின் மற்றும் சில சத்துக்கள் கண்களில் புரைநோய் வராமல் தடுக்குமாம். மேலும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் முட்டையில் இருக்கிறது. முழுமையான உணவு எதுவென்றால் அது முட்டை தான்.
முட்டைகள் அதிக சத்துக்கள் நிறைந்தவை மற்றும் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கக்கூடியது. ஆரோக்கியமான மற்றும் நிலையான சத்துக்களை கொண்டுள்ளன முட்டை இயற்கையான மல்ட்டி வைட்டமின் ஆகும்.
முட்டை ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க குழந்தை காசை முழுங்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |