Jaggery Tea Disadvantages in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு டீ என்றால் மிகவும் பிடிக்குமா..? நான் கேட்கும் கேள்வி தவறென்று நினைக்கிறேன். ஏனென்றால் யாருக்கு தான் டீ பிடிக்காது சொல்லுங்கள். காலையில் எழுந்ததும் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே அவர்களுக்கு ஓடாது. இவ்வளவு ஏன் நம் நாட்டில் ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் டீ குடிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். அதிலும் இந்த வெயில் காலத்தில் கூட பல முறைக்கு மேல் டீ குடிப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி டீ குடிப்பது தவறில்லை. ஆனால் அதில் என்ன சேர்த்து குடிக்கிறோம் என்பது தான் முக்கியம். சரி வாங்க நண்பர்களே இன்று நாம் காணப்போகும் பதிவு என்ன என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம்.
டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா |
டீயில் வெல்லம் போட்டு குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
இப்போது இது என்ன பதிவு என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். சரி சொல்லுங்கள் நண்பர்களே உங்களுக்கு டீயில் வெல்லம் போட்டு குடிக்க பிடிக்குமா..? பொதுவாக நம்மில் பலருக்கும் வெல்லம் போட்ட டீ என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் வெல்லம் சேர்த்து தான் டீ குடித்து வந்தார்கள்.
அதுபோல வெல்லத்தில் பல நன்மைகள் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். சர்க்கரையில் இருக்கும் சத்துக்களை விட வெல்லத்தில் பல சத்துக்கள் இருக்கிறது. ஆனால் டீயில் வெல்லம் போட்டு குடிக்க கூடாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அதை பற்றி இங்கு காணலாம்.
டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த பதிவு தான் |
பொதுவாக நம் ஒரு சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது அது நமக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுபோல தான் டீயும் வெல்லமும், அதாவது டீயும் வெல்லத்தையும் ஒன்றாக சேர்த்து குடிக்கும் போது அது நமக்கு சில பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
காரணம், வெல்லத்தில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனுடன் நாம் பால் சேர்த்து குடிப்பதால் அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
- குடலில் நச்சுக் கழிவுகள் உருவாகும்.
- அது செரிமானத்தை பாதிக்கும்.
- வெல்லத்தை அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
- சுத்திகரிக்கப்படாத வெல்லம் உங்கள் உடலில் உள்ள மொத்த கொழுப்பு உள்ளடக்கத்தை அதிகரிக்கலாம்.
- அதிகப்படியான உட்கொள்ளல் அஜீரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
- தேநீர் ஒட்டுண்ணி நோய்த்தொற்றின் அதிக ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |