கற்பூரவள்ளி இலையில் இவ்வளவு விஷயம் இருக்கா.!

Advertisement

Karpuravalli Uses in Tamil

பொதுவாக கிராமத்தில் கிடைக்க கூடியது கற்பூரவல்லி, இதனை சளி மற்றும் இருமல் பிரச்சனைக்கு நம் முன்னோர்கள் இதனை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இதனை பற்றி நம் முன்னோர்கள் கூறினாலும் அதனை எடுத்து கொள்வதில்லை. இவை சளி மற்றும் இருமலுக்கு மட்டுமில்லை பல நன்மைகள் உள்ளது. அவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கற்பூரவல்லி பயன்கள்: 

சளி மற்றும் இருமல் சரி செய்ய:

இருமல், சளி

மழைக்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல் பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்வதற்கு கற்பூரவல்லி சாறை குடித்து வந்தால் சரியாகிடும், மேலும் சுவாச பிரச்சனை இருந்தாலும் அதனையும் சாராய் செய்ய கூடியது.

தோல் பிரச்சனை:

நம் தோலில் ஏற்படும் அரிப்பு, படை, சிரங்கு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. இதற்கு கற்பூரவள்ளி இலையை பேஸ்ட்டாக அரைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும்.

சாதம் சாப்பிடுவதை 1 மாதம் மட்டும் நிறுத்தினால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா..?

பதற்றம் குறையை:

சில நபர்களுக்கு பதற்றம், கவலை அடைவார்கள். மேலும் ,மனதானது அமைதியாக காணப்படாது. இதனை சரி செய்வதற்கு கற்பூரவள்ளி இலைகளின் வாசத்தை நுகர்ந்தால் போதும். இந்த இலைகளில் உள்ள வாசமானது நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை குறைய செய்கிறது.

சிறுநீரகம்: 

சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்ககளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

சில வகையான உணவு வகைகளாலும், நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதாலும் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது.

கொலஸ்ட்ரால் குறைய:

இந்த இலைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க  உதவுகிறது. மேலும் நீங்கள் கற்பூரவள்ளி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

நரை முடி:

நரை முடி

நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு கற்பூரவள்ளி இலை உதவுகிறது. இதற்கு இலையை பறித்து பேஸ்ட்டாக அரைத்து தலையில் தடவு குளிக்க வேண்டும். இதனை முகத்தில் தடவினாலும் பருக்களை நீக்கி முகம் பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

கருப்பு உளுந்தை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement