Black Seed Oil Benefits in Tamil
பொதுவாக எண்ணெய்களில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு எண்ணெயும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெயை தலை முடி முதல் முகம் அழகு வரைக்கும் பயன்படுத்துவோம். நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சிக்கு உதவுகிறது. வேப்ப எண்ணெயானது, தலையில் உள்ள ஈர் மற்றும் பேன்களை அழிப்பதற்கு உதவுகிறது. அந்த வகையில் கருஞ்சீரக எண்ணெய் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்திருப்பதில்லை. அதனால் தான் இந்த பதிவில் கருஞ்சீரக ஆயிலில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
கருஞ்சீரக ஆயில் நன்மைகள்:
தோல் ஆரோக்கியம்:
கருஞ்சீரக எண்ணெயானது பூஞ்சை தொற்று, ஈஸ்ட் தொற்று, பூஞ்சை எதிர்ப்பு பண்பு போன்ற பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக இருக்கிறது.
சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது, காயங்களை ஆற்றுவதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் தோல் அலர்ஜிகளை குறைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
கருஞ்சீரக எண்ணெயில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரியல் ஏஜென்ட் உள்ளது. இவை பாக்ட்ரியாக்களை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மூட்டு வலி, முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
ஆஸ்துமா:
இந்த எண்ணெயில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
தினமும் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா
முடிக்கு ஆரோக்கியம்:
இந்த எண்ணையை தலையில் தேய்ப்பதால் முடி வளர்ச்சிக்கும், நரை முடியை சரி செய்வதற்கும் உதவுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது:
உடல் எடை என்பது இன்றைய காலத்தில் உள்ளவர்களுக்கு கூடி கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நிறைய மருந்துகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் செய்கின்றனர். இதற்கு கருஞ்சீரக எண்ணெயானது சிறந்த தீர்வாக இருக்கும். இவை உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க செய்கிறது.
இரத்த சர்க்கரை:
இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சரியாக வைத்து கொள்வதற்கு கருஞ்சீரக எண்ணெய் உதவுகிறது.
செரிமான பிரச்சனை:
உணவு முறை காரணமாக செரிமான பிரச்சனை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த எண்ணெயானது செரிமான பிரச்சனை இல்லாமல் வைத்து கொள்வதற்கு உதவுகிறது, மேலும் வயிற்று வலி, வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகளிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
உடல் எடை குறையும்:
கருஞ்சீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. அதனால் உடல் எடை இழப்பில் இது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
புற்றுநோயை குணப்படுத்தும்:
இந்த கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. அதோடு இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் மிக அதிகம்
கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை:
- முதலில் அரை கப் அளவிலான கருஞ்சீரக விதைகளைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இதை கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் எடுத்துக் கொள்ளலாம்.
- அதன் பிறகு 1 கப் அளவிலான பாதாம், ஆர்கன் அல்லது தேங்காய் எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
- இதில் பாட்டிலில் எண்ணெய் கருமை நிறமாக மாறும் வரை கலக்க வேண்டும்.
- பிறகு இதை சூடான இடத்தில் இரண்டு வாரங்கள் வரை விட்டு விடலாம்.
- அதன் பின், விதைகளை வடிகட்டி, மீண்டும் எண்ணெயை பாட்டிலில் ஊற்றி விட வேண்டும்.
- இது தவிர, கருஞ்சீரக எண்ணெயை மற்ற எண்ணெய்களுடன் கலக்காமல் நேரடியாக உச்சந்தலையில் தடவலாம்.
கருஞ்சீரக எண்ணெய் தேய்ப்பதன் மூலம் தலைமுடி வளர்வதோடு பல்வேறு உடல் பிரச்சனைகளையும் நீக்குகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |