கருப்பு கொள்ளு பயன்கள்
நம் முன்னோர்கள் காலத்தில் உடலிற்கு ஆரோக்கியமான பொருட்களை மட்டும் தான் சாப்பிட்டு வந்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆரோக்கியத்தை சீர் குலைக்கிற உணவுகளை சாப்பிடுகின்றனர். அப்படியே இது மாதிரி சாப்பிடாதீர்கள். உடலிற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் என்று முன்னோர்கள் கூறினாலும் அதெல்லாம் எனக்கு தெரியும் கூறி கொண்டு அவர்களை அலட்சியப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு உணவிலும் நன்மைகள் தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் கருப்பு கொள்ளில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
100 கிராம் கருப்பு கொள்ளு சத்துக்கள்:
- 22 கிராம் புரதம்
- 0 கிராம் கொழுப்பு
- 3 கிராம் தாதுக்கள்
- 5 கிராம் நார்ச்சத்து
- 57 கிராம் கார்போஹைட்ரேட்
- கால்சியம் 287 மி.கி
சிறுநீரக கல்:
கருப்பு கொள்ளில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
சிறுநீரகங்களில் கால்சியம் ஆக்சிலேட் என்பது தான் சிறுநீரக கற்கள். இவற்றை நீக்கும் தன்மை கருப்பு கொள்ளிற்கு இருக்கிறது. அதனால் கருப்பு கொள்ள தினமும் உணவில் சேர்த்து கொள்ளவும்.
மாப்பிள்ளை சம்பாவின் நன்மைகள்…
மலச்சிக்கல் நீங்க:
கருப்பு கொள்ளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதனால் தினமும் முளைகட்டிய கருப்பு கொள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
மாதவிடாய் பிரச்சனை:
பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் குறைவான இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு கொள்ளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனை சரியாகும்.
விந்தணு அதிகரிக்க:
கருப்பு கொள்ளில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
சர்க்கரை நோய்:
கருப்பு கொள்ளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.
எடை குறைய:
இதில் ஹார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது, மேலும் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனை:
கருப்பு கொள்ளு செரிமான பிரச்சனையை சரி செய்வதற்கும், எளிதில் உணவுகள் செரிமானம் ஆகுவதற்கும் உதவுகிறது. மேலும் வாயு பிரச்சனை வராமலும் பாதுகாத்து கொள்கிறது.
காய்ச்சல் மற்றும் சளி:
கருப்பு கொள்ள தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
இதனை சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனை இருக்கும் போது சூப்பாக வைத்து குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனை சரியாகும்.
நவதானியம் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |