Karuppu Ulundhu Benefits in Tamil
ஒரு மனிதன் நன்கு ஆரோக்கியமுடன் இருப்பது என்பது மிக மிக முக்கியம். அதுவும் இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடல் ஆரோக்கியம் என்பது அவ்வளவாக சீராக இருப்பது இல்லை. அதாவது ஒரு நாள் ஒருவர் திடமான உடல்நலத்துடன் உள்ளார் என்றால் மற்றோர் நாள் அப்படி இருப்பது இல்லை. இதற்கு முக்கியமான காரணம் என்றால் நமது உணவுமுறை தான். ஒருவரின் உணவுமுறை சரியாக இருந்தால் அவர் நன்கு திடமான ஆரோக்கியத்துடன் இருப்பார், மாறாக நமது உணவுமுறை சரியில்லை என்றால் நமது உடல்நலமும் சரியாக இருப்பதில்லை. அதனால் நமது உணவில் தினமும் நன்கு ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நாம் சேர்த்து கொள்ளும் உணவுகளால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது தெரிந்திருக்கணும். அதனால் தான் இன்று கருப்பு உளுந்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..
பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
கருப்பு உளுந்து நன்மைகள்:
பொதுவாக கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதனால் இதனை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
எலும்புகள் பலப்படும்:
நாம் அனைவருக்குமே வயது அதிகரிக்க அதிகரிக்க நமது எலும்புகள் மற்றும் மூட்டுக்கள் அதிக அளவு பலவீனம் அடைகின்றது என்பது தான் உண்மை.
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புசத்து மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் பரவலாக உள்ளதால் இதனை தொடர்ந்து சாப்பிடுபவதால் நமது எலும்புகள் நன்கு பலமடையும்.
தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் இப்படியெல்லாம் கூட நடக்குமா
நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க:
பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவினை சேர்த்து கொள்வது நல்லது. கருப்பு உளுந்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
அதனால் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தினமும் அல்லது சரியான அளவில் கருப்பு உளுந்தினை எடுத்து கொள்வதின் மூலம் இரத்தத்தில் இன்சுலின் மற்றும் குளுக்கோஸின் அளவை சமப்படுத்த முடியும். இதனால் நோயின் தாக்கமும் குறையும் வாய்ப்புள்ளது.
இதய ஆரோக்கியம்:
கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்துவதற்கும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
பாதாமில் அதிக நன்மை உள்ளதுனு நமக்கு தெரியும் ஆனால் பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா
செரிமானம் மேம்பட உதவுகிறது:
கருப்பு உளுந்து சாப்பிட்டால் இதில் இருக்கும் நார்ச்சத்து முழுவதும் ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செரிமானத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறைக்கப்படுகிறது.
சருமத்தை பராமரிக்க:
சருமம் சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்க கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம். வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், முகப்பரு அறிகுறிகளைக் குறைக்கவும் கருப்பு உளுந்தை அடிக்கடி சாப்பிடலாம்.
இதை தெரிஞ்சிக்காம மட்டும் கம்பினை சாப்பிடாவே சாப்பிடாதீங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |