வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கஸ்தூரி மஞ்சளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.!

Updated On: July 11, 2023 11:52 AM
Follow Us:
kasthuri manjal benefits in tamil
---Advertisement---
Advertisement

கஸ்தூரி மஞ்சள் நன்மைகள்

நம் முன்னோர்களின் காலத்தில் பாட்டிகள் எல்லாம் சோப்பு போட்டு குளிக்கிறார்களோ இல்லையோ முகத்திற்கு கண்டிப்பாக மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். அதனால் தான் நம் பாட்டிகளுக்கெல்லாம் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தேமல் போன்ற பிரச்சனை எல்லாம் இல்லாமல் முகத்தை அழகாக வைத்திருந்தனர். ஆனால் இன்றைய கால பெண்களுக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னால் குளிக்க மாட்டார்கள். அதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிவதில்லை அதனால் தான் அதனை அலட்சியம் செய்கிறார்கள். இந்த பதிவில் கஸ்துரி மஞ்சளில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

கஸ்தூரி மஞ்சள் நன்மைகள்:

இருமலை சரி செய்வது எப்படி.?

இருமலை சரி செய்வது எப்படி

கஸ்தூரி மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் இருமலை சரி செய்ய மற்றும் தொண்டை வலியை சரி செய்வதற்கும் உதவுகிறது. இதற்கு பசும் பாலை கொதிக்க வைத்து அதில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து வடிக்கட்டி தினமும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் இருமலை சரி செய்யும்.

புற்றுநோய் வராமல் தடுக்க:

புற்றுநோய் வராமல் தடுக்க

ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.

மஞ்சள் தூளை சமையலுக்கு சேர்க்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

காயத்தை சரி செய்ய:

காயத்தை சரி செய்ய

நம் உடலில் உள்ள காயங்கள், தழும்புகள், பாம்பு கடி மற்றும் கீறல்களுக்கு சிகிச்சையளிப்பதில் கஸ்தூரி மஞ்சள் உதவுகிறது. கஸ்தூரி மஞ்சளில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் செல் மீளுருவாக்கம் ஊக்குவிக்கிறது.  காயங்களை குணப்படுத்தும் செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் தழும்புகளை குணப்படுத்த உதவுகிறது.

தோலிற்கு கஸ்தூரி மஞ்சள்:

தோலுக்கு கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சலின் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, காயம் குணப்படுத்துதல் மற்றும் ஆன்டிமெலனோஜெனிக் பண்புகள் ஆகியவை சரும அழகை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

கஸ்தூரி மஞ்சள் தோல் நோய்களை சரி செய்வதற்க்கு உதவுகிறது. நம் முகத்தில் ஏற்படும் முகப்பரு, தழும்புகள், தோல் அலர்ஜி, கரும்புள்ளிகள் போன்றவையரை சரி செய்து முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

தோலின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது: 

கஸ்தூரி மஞ்சள் என்பது ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் சரும பளபளப்பை நீக்குவதற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. இதற்கு ரோஸ் வாட்டருடன் கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து கொள்ளவும்.  இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

நீங்க வீட்டில் மஞ்சள் பயன்படுத்துவீங்களா..! அப்போ இது தெரியாம பயன்படுத்தாதீங்க..!

இதனை தினமும் செய்து வந்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.  மேலும் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குகிறது.

வயதான தோற்றம் வராமல்:

ஆன்டிஆக்ஸிடன்ட், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கஸ்தூரி மஞ்சள் இரத்தத்தில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற ஃப்ரீ ரேடிக்கல் சேதம் மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கிறது.

வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now