கீட்டோ உணவு முறை – Keto Diet Chart in Tamil
கீட்டோ டயட் என்றும் அழைக்கப்படும் கீட்டோஜெனிக் டயட், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு. இந்த உணவில், உடலானது தனது ஆற்றலுக்காக கொழுப்பை சார்ந்து இருக்கிறது. இந்த உணவில், கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து) மிகக் குறைவு மற்றும் புரதம் மிகவும் மிதமான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் கொடுக்கப்படுகிறது.
“கீட்டோன்களை ஆற்றலுக்கான வளமாக உடல் பயன்படுத்தும் போது, அது சுருக்கமாக கீட்டோ டயட் என்று அழைக்கப்படுகிறது.” இந்த உணவில், நீங்கள் அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதில்லை. கொழுப்புகள் மிக அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த உணவில், Keto Shake, சீஸ், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் பழங்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. புரத சத்திற்காக, கோழி, மட்டன், மீன் ஆகியவவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
உடல் எடையை குறைப்பதற்கு இந்த கீட்டோ டயட்டை பின்பற்றினாலும். அதில் பலரும் இந்த டயட்டால் எடை பெரிதாக குறைவதில்லை என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் கீட்டோ டயட் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அதை பின்பற்றுவது தான். கீட்டோ டயட்டை பின்பற்றும் போது என்னென்ன உணவுகளை சாப்பிடலாம், என்னென்ன உணவுகளை சாப்பிட கூடாது என்று நன்கு தெரிந்து கொண்டு அதை பின்பற்ற வேண்டும். சரி வாங்க! இந்த டயட்டில் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிட கூடாது என்று இங்கே பார்ப்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடல் எடையை குறைக்க உதவும் 5 டயட் உணவுகள்..!
சாப்பிட வேண்டிய உணவுகள் – Keto Diet Plan in Tamil:
- கடல் உணவுகள்,
- குறைந்த கலோரி காய்கறிகள்,
- சீஸ்,
- அவகேடோ,
- சிக்கன்,
- முட்டை,
- நட்ஸ் மற்றும் விதைகள்,
- யோகர்ட்,
- காட்டேஜ் சீஸ்,
- பெர்ரீஸ்,
- இனிப்பு சேர்க்காத டீ மற்றும் காபி,
- டார்க் சாக்லெட் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
கீட்டோவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- முழு தானியங்கள்,
- ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள்,
- அதிக சர்க்கரை உள்ள பழங்கள்,
- ஜூஸ்,
- தேன்,
- சர்க்கரை,
- சிப்ஸ்,
- பேக் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பேலியோ டயட் உணவுகள்
Non Vegetarian Keto Diet Chart in Tamil:
நேரம் | கீட்டோ உணவு முறை |
காலை 6:30 மணி | சர்க்கரை இல்லாமல் காபி அல்லது டீ |
காலை 8:00 மணி | சீஸ் உடன் முட்டை |
மதியம் 12:30 மணி | வறுத்த கோழி ஆலிவ் எண்ணெய் மற்றும் வினிகருடன் கீரை, வெள்ளரி மற்றும் காளான் சாலட் |
மாலை 4:00 மணி | ஒரு கிளாஸ் எலுமிச்சையுடன் சோடா |
இரவு 8:00 மணி | புதினா சட்னியுடன் தந்தூரி சிக்கன் |
Vegetarian Keto Diet Chart in Tamil:
நேரம் | கீட்டோ உணவு முறை |
காலை 6:30 மணி | சர்க்கரை இல்லாமல் காபி அல்லது டீ |
காலை 8:00 மணி | கீரையுடன் கூடிய பனீர் காளான் புர்ஜி |
மதியம் 12:30 மணி | சோயா புர்ஜியுடன் கோதுமை மாவு ரொட்டி |
மாலை 4:00 மணி | சர்க்கரை இல்லாமல் எலுமிச்சை சோடா |
இரவு 8:00 மணி | ப்ரோக்கோலி காளான் சீஸ் உடன்வறுத்து சாப்பிடலாம் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |