தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸை சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

Advertisement

Kidney Beans Benefits in Tamil

நமது உடலானது மிகவும் ஆரோக்கியத்துடனும் நன்கு வலுவுடனும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமது உணவு முறை சரியாக இருக்க வேண்டும். அதாவது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிக அளவு புரதசத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலவகையான உணவுகளை நாம் நமது அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அப்படி நாம் நமது உடலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்று நினைத்து உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்தினை அளிக்குமா என்றால் அது சிறிதளவு சந்தேகம் தான். அதற்கு  முதலில் நாம் எவ்வற்றையெல்லாம் உட்கொண்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கிட்னி பீன்ஸை தினமும் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

5 நாட்களுக்கு மட்டும் உப்பினை சாப்பிடாமல் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா

கிட்னி பீன்ஸ் பயன்கள்:

Kidney Beans Payangal in Tamil

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு அதிக அளவு புரதசத்து தேவை. அதனை நமக்கு அதிக ளவு அளிப்பது பருப்பு வகைகள் தான். அப்படிப்பட்ட பலவகையான பருப்பு வகைகளில் ஒன்று தான் இந்த கிட்னி பீன்ஸ்.

இது சிறுநீரக வடிவில் இருப்பதால் சிறுநீரக பீன்ஸ் என்ற பெயரை கொண்டுள்ளது. இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். அவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

1. நீரிழிவு நோய்க்கு சிகிச்சை:

சர்க்கரை நோய்யை தடுக்க

அதாவது அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் இந்த கிட்னி பீன்ஸ் பொதுவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

மற்ற மாவுச்சத்துள்ள உணவுகளை விட இது மிகவும் சிறந்த உணவு ஆகும். இந்த கிட்னி பீன்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை இரண்டும் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்கின்றன. இதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

1 கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நடக்குமா இது தெரியாம போச்சே

2. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த:

ஆரோக்கியமான இதயம்

சிறுநீரக பீன்ஸ் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிட்னி பீன்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பெருங்குடல் நொதித்தல் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நமது இதயம் மிகவும் ஆரோக்கியத்துடன் செயல்பட இது மிகவும் உதவுகிறது.

3. புற்றுநோயைத் தடுக்க:

புற்றுநோயை தடுக்க

பொதுவாக இந்த கிட்னி பீன்ஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரங்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த கிட்னி பீன்ஸில் ஃபிளாவோனால்கள் அதிக அளவில் இருப்பதால், அவை புற்றுநோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் சிறுநீரக பீன்ஸில் உள்ள லிக்னான்கள் மற்றும் சபோனின்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளன என்று கூறுகின்றது.

வறட்டு இருமலாக உள்ளதா அப்போ என் பாட்டி சொன்ன இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க

4. எடை குறைய:

உடல் எடை குறைய

சிறுநீரக பீன்ஸ் எடை குறைக்க உதவும். இதற்கு முதல் காரணம் சிறுநீரக பீன்ஸில் உள்ள நார்ச்சத்து தான். நார்ச்சத்து உங்களை முழுதாக வைத்திருக்கும் மற்றும் உணவின் வெப்ப விளைவை அதிகரிக்கிறது.

இதனால் உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படாது. அதனால் உணவு உட்க்கொள்ளும் அளவும் குறையும். இதன் மூலம் உங்களது உடல் எடை குறைய தொடங்கும்.

5. எலும்புகளை வலுப்படுத்த:

எலும்புகள் வலுப்பெற

இந்த கிட்னி பீன்ஸில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும். மேலும் இந்த சிறுநீரக பீன்ஸில் உள்ள ஃபோலேட் மூட்டு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

2 வாரத்திற்கு சர்க்கரை இல்லாத உணவை சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா உயிருக்கே ஆபத்தா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement