கொழுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்
உடல் பருமன் என்பது ஒரு மருத்துவ நோய், அதிகப்படியான கொழுப்பு ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு உருவாகும்போது உடல் பருமன் அதிகரிக்கிறது.
ஒரு நபரின் உடல் நிறை குறியீடு எண் (BMI) என்பது அதிக எடையை மதிப்பிடுவதற்கான ஒரு கருவியாகும். BMI என்பது ஒருவரின் வயதுக்கு ஏற்ற உயரம், எடை இவற்றிக்கு இடையேயான அளவுகளை குறிப்பது. BMI, 30 -க்கு அதிகமாக இருந்தால் அவர் உடல் பருமன் கொண்டவர் என வரையறுக்கப்படுகிறது. இவற்றில் இருந்து தன்னை காத்து கொள்ள நாம் உட்கொள்ளும் உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும்.
உலகம் முழுவதுமே இன்று Obesity எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இன்றைய இளைய தலைமுறைகளாகட்டும், பெரியவர்களாகட்டும் அனைவரும் தங்களது எடையை குறைக்க அதிகம் பாடுபடுகின்றனர். அதுவும் வயிற்று பகுதியில் உள்ள அதிகபடியான கொழுப்பை (தொப்பை) குறைப்பதற்காக நீங்கள் மருந்தகம் நோக்கி போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
சரியான முறையில் சாப்பிட்டால் நிச்சயமாக 80% கொழுப்பை குறைக்க முடியும். இப்படி உடலில் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும் சில உணவுகள் இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுங்கள். உங்களது முயற்சி வெற்றி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள்.
நமது உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைப்பதற்கு இதை மட்டும் செஞ்சு பாருங்க..!
கொழுப்பை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்.
மஞ்சள்:
மஞ்சளை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, மற்றும் ரத்தம் உறைவதை தடுத்து இதய நோய் வராமல் இருக்க உதவுகிறது.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையை, நீங்கள் உணவில் தினமும் எடுத்துக்கொண்டால், சிறந்த பலன்களை கொடுக்கும். அதாவது கறிவேப்பிலை உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களை நீக்க உதவுகிறது.
உளுத்தம் பருப்பு:
உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாது சத்துக்களும் நிறைந்துள்ளன. உளுத்தம் பருப்பு, குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் பருமன் குறைய அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயம்
வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் வேதிப் பொருள் காணப்படுகின்றது. க்யூயர்சிடின், ஒரு பிளேவனாய்டு ரகம். அதாவது உடலின் ரத்தக்குழாய்களில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் குணம் கொண்டவை இந்த க்யூயர்சிடின். ஆக வெங்காயத்தை உணவுகளில் தேவையான அளவு சேர்ப்பதன் மூலம் கொழுப்பு குறையத் தொடங்கும்.
வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைய உப்பு போட்டு டீ குடியுங்கள்..!
புளித்த உணவுகள்
புளித்த உணவு, என்றாலே தயிர் தான் பலரின் நினைவுக்கு வரும். தயிர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது, அதனால் தயிர், மோர் போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிக கொழுப்பு உடலில் சேராது. அதே போன்று புரோபயாடிக் உணவுகளான தோசை, இட்லி, பன்னீர், ஊறுகாய், மோர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்குவதை தடுக்கிறது.
இவை மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய உணவு பொருட்கள் உள்ளன. அவை பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகு, முட்டைகோஸ், தக்காளி, இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு,உருளை கிழங்கு, ஆப்பிள், பசலைக்கீரை, பீன்ஸ், கொள்ளு, வால்நட், சிட்ரஸ் பழங்கள், கிரீன் டீ, மீன் ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன.
ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி பேஸ்ட்டுடன் சிறிது கிராம்பு, பச்சை பூண்டு ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |