கோரைக்கிழங்கின் நன்மைகள்..! | Korai Kizhangu Benefits in Tamil

Advertisement

Korai Kizhangu Benefits in Tamil

கோரை கிழங்கு என்பது மருத்துவ குணம் நிறைந்த ஒன்றாகும். கோரைக்கிழங்கை முத்தக்காசு, எருவை மற்றும் கோரா ஆகிய பெயர்களில் அழைப்பார்கள். இத்தாவரம் வறண்ட பகுதியில் வளரக்கூடியது ஆகும். இதன் கிழங்கு பகுதி உண்ணக்கூடிய பகுதி ஆகும், இக்கிழங்கு முட்டை வடிவத்தில் இருக்கும். இதன் சுவை கசப்பு தன்மையுடன் இருக்கும். ஆனால், இவற்றில் நம் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களை தீர்க்கவும் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது. ஆகையால், இக்கிழங்கின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக, நம் உடலில் ஏற்படும் அணைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய பல்வேறு இயற்கை பொருட்கள் இவ்வுலகில் அதிகமாக உள்ளன. ஆனால், நாம் தேடி செல்வது மாத்திரைகளை தான். நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவுமுறைகளை நாமும் தவறாமல் பின்பற்றி வருவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடிகிறது.

கோரைக்கிழங்கு நன்மைகள்:

கோரை கிழங்கை காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு தினமும் பயன்படுத்தி வருவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம். ஆகையால், கோரைக்கிழங்கை என்ன நோய்க்கு எப்படி பயன்படுத்த வேண்டும்.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

காய்ச்சல் குணமாக: 

 கோரைக்கிழங்கு நன்மைகள்

கோரைகிழங்கு காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்டது. தண்ணீரில்,  5 கிராம் கோரைகிழங்கு பொடி, 1/4 ஸ்பூன் சுக்கு பொடி மற்றும் 1/4 ஸ்பூன் பணங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்து வர காய்ச்சல் குணமாகும். குறிப்பாக, மலேரியா காய்ச்சல் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

மரவள்ளி கிழங்கு சாப்பிடுவனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரியுமா

உடல் எடை அதிகரிக்க:

 கோரை கிழங்கு பொடி பயன்கள்

உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு கோரைக்கிழங்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆகையால், கோரைக்கிழங்கு பொடியை தினமும் இருவேளை 2 கிராம் அளவிற்கு பாலில் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.

சரும ஆரோக்கியத்திற்கு:

இக்காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனியாக்களில் ஒன்று சரும பிரச்சனை. ஆகையால், கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு போட்டி மற்றும் சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள பருக்கள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஆகியவை நீங்கி சரும ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும்  இருக்கும்.

உடல் துர்நாற்றம் நீங்க:

கோரைக்கிழங்கு பொடியை உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும். மேலும், உடலினை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.

பெண்களுக்கு நல்லது:

 கோரை கிழங்கு பயன்கள்

கோரைக்கிழங்கு பெண்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. அதாவது, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி மற்றும் கருப்பை புண் ஆகியவற்றிக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

சேப்பங்கிழங்கு சாப்பிடுவாதல் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

அஜீரண கோளாறு நீங்க:

கோரைக்கிழங்கு பொடியை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து 1 ஸ்பூன் அளவிற்கு கொடுத்து வருவதன் மூலம் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு நீங்கும்.

சிறுநீரக பிரச்சனை தீர:

சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட சிறுநீரக சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கோரைக்கிழங்கு ஒரு சிறந்த மருந்தாகும்.  மேலும், மூட்டுவலி, குடல் பூச்சி வெளியேற போன்றவற்றிற்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும்.

👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement