Kothavarangai Benefits
பொதுவாக காய்கறிகள் என்றாலே குழந்தைகள் அதிகமாக சாப்பிட மறுப்பார்கள். அதிலும் குறிப்பாக கேரட், பீட்ரூட் மற்றும் பாகற்காய் என்றால் சுத்தமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் காய்கறிகளில் தான் மற்ற அனைத்தினையும் விட அதிகமாக சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த வகையில் சிலருக்கு எந்த காய்கறியில் என்ன சத்து இருக்கிறது, அவற்றை சாப்பிட்டால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்ற அடிப்படை விவரங்கள் கூட தெரியாமல் உள்ளது. அதனால் இன்று காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகின்றன கொத்தவரங்காய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
கொத்தவரங்காய் சத்துக்கள்:
கொத்தவரங்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், நார்ச்சத்து, சர்க்கரை, கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள் என பல சத்துக்கள் அடங்கி உள்ளது. இத்தகைய சத்துக்கள் அனைத்தும் நம்முடைய உடலில் ஏதோ ஒரு வகையான நன்மைகளை அளிக்கிறது.
கொத்தவரங்காய் பயன்கள்:

- கொத்தவரங்காயில் நார்சத்து இருப்பதால் இதனை நாம் உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் வராது.
- இதனை நாம் உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் இதில் உள்ள வைட்டமின் அனைத்தும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச்செய்து ஆற்றலோடு இருக்க உதவுகிறது.
- அதுமட்டும் இல்லாமல் கொத்தவரங்காயை நாம் ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவினை சரியான அளவில் இருக்க செய்கிறது.
- இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நமது உடலில் காணப்படும் எலும்புகளை பலம்பெற செய்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
- இத்தகைய காயில் காணப்படும் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் வைட்டமின்கள் கருவில் உள்ள நரம்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் மூளையில் உள்ள எரிச்சலூட்டும் நரம்புகளை சரி செய்யவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
- அதேபோல் இது மனிதர்களுக்கு காணப்படும் மன அழுத்தத்தினை குறைக்கவும் பயன்படுகிறது.
- மேலும் இந்த காயில் உள்ள பொட்டாசியம், கால்சியம், புரதம், குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் காணப்படுகிறது. இதனை நாம் அமைத்து சாப்பிடுவதன் மூலம் கொழுப்பினை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொத்தவரங்காய் தீமைகள்:

- பொதுவாக நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் நன்மைகள் எப்படி நிறைந்து உள்ளதோ அதேபோல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சிறிய தீமைகள் இருக்கிறது. அதனால் எந்த உணவையும் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
- கொத்தவரங்காயில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் வாயு பிரச்சனை மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகள் வரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆரோக்கியமும் நல்வாழ்வும் |