இடது பக்கம் வயிறு வலிக்க காரணம் என்ன..?

Advertisement

இடது பக்கம் வயிற்று வலி காரணங்கள்

உடல் வலி ஏற்படுவது இயற்கையானது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படுவது இயற்கையானது. ஆண்களுக்கு வயிற்றில் கல் பிரச்சனை இருந்தால் வயிற்று வலி ஏற்படும். ஆனால் வயிற்று வலி சாதரணமாக நினைக்க கூடாது. வலது பக்க வயிற்று வலி, இடது பக்க வயிற்று வலி என இருக்கிறது. இந்த பக்கத்து வலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக வலிக்கிறது. அந்த காரணங்களை தெரிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் இடது பக்கம் வயிறு வலித்தால் என்ன காரணம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இடது பக்கம் வயிறு வலித்தால் என்ன காரணம்:

குடல் அலர்ஜி:

இடது பக்கம் வயிறு வலித்தால் என்ன காரணம்

இடது பக்கம் வயிற்றின் தொப்புள் பகுதிக்கு 2 அடி பக்கத்தில் வலிக்கிறது என்றால் appendicitis வலியாக இருக்கலாம். இதற்கான அறிகுறிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  • தொப்புள் அல்லது மேல் பகுதி வயிற்றில் வலி ஏற்படலாம்.
  • மலசிக்கல்
  • அடிவயிற்றில் வீக்கம்
  • காய்ச்சல்
  • வயிற்றுப்போக்கு

டைவர்டிகுலிடிஸ்:

இடது பக்க வலியோடு, காய்ச்சல் மற்றும் குமட்டல், வயிற்று பிடிப்பு போன்றவையும் சேர்ந்து  இருந்தால் டைவர்டிகுலிடிஸ் பிரச்சனையாக இருக்கலாம். அதனால் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

மலசிக்கல்:

இடது பக்கம் வயிறு வலித்தால் என்ன காரணம்

மலசிக்கல் பிரச்சனை இருந்தால் இடது பக்க வலி ஏற்படும். நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலசிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

வலது பக்கம் வயிறு வலித்தால் என்ன பிரச்சனை ஏற்படும்..!

சிறுநீரக கற்கள்:

இடது பக்கம் வயிறு வலித்தால் என்ன காரணம்

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து அவை வெளியேறும் போது வலியை ஏற்படுத்தும். இவை இடது பக்க வலி, முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளும் இருந்தால் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

வயிற்று புண்:

வயிற்றில் புண் இருந்தாலும் இடது பக்கம் வயிற்றில் வலி ஏற்படும். வயிற்று புண் தானென்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை குமட்டல், செரிமான பிரச்சனை, பசியின்மை, எடை இழப்பு போன்ற பிரச்சனையும் சேர்ந்து இருந்தால் வயிற்றில் புண்கள் இருக்கலாம். அதனால் அதற்கான சிகிச்சையை பெறுவது நல்லது.

இரைப்பை குடல் அழற்சி:

இடது பக்கம் வயிறு வலித்தால் என்ன காரணம்

 

இரைப்பை குடல் அலர்ஜி என்பது வயிற்று காய்ச்சல் என்று அழைக்கிறோம்.  இதனை ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். வயிற்று பிடிப்பு, வயிற்று போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி, பசியின்மை, தசை வலி, சோர்வு போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து இருந்தால் இரைப்பை குடல் அலர்ஜியாக இருக்கலாம்.

குடல் அழற்சி நோய்கள்:

குடல் அலர்ஜி நோய் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். இவை கடுமையான வலி, சோர்வு, வயிற்று போக்கில் இரத்தம் ஏற்படுதல் போன்றவை குடல் அலர்ஜி நோய்க்கான அறிகுறிகள். இது போன்று இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

பெண்களுக்கு இடது பக்கம் வயிற்றில் வலி ஏற்பட்டால்:

மாதவிடாய் களங்களில் ஏற்படும் வலி

இளம் பெண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருப்பையின் புறணியிலிருந்து செல்கள் கருப்பைக்கு வெளியே வளரும்போது இடது பக்க வலியை ஏற்படுத்தும்.

கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால் இடது பக்க வலியை ஏற்படுத்தும்.

ஆண்களுக்கு இடது பக்கம் வயிற்றை வலித்தால்:

ஆண்களுக்கு குடலிறக்கம் பிரச்சனை ஏற்பட்டால் இடது பக்க வலியை ஏற்படுத்தும்.

வெயில் காலத்தில் அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்..  அப்போ இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்

 

Advertisement