Lemon in Bedroom Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவின் வாயிலாக உங்களுக்கு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டேன் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அது என்ன தகவல் என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். இருந்தாலும் மறுமுறையும் நினைவு படுத்துகிறேன். படுக்கை அறையில் எலுமிச்சை பழத்தை வெட்டி வைப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா |
படுக்கை அறையில் எலுமிச்சை பழம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்:
எலுமிச்சை பழத்தை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நாம் அனைவருமே எலுமிச்சை பழத்தை பார்த்திருப்போம். அதை பல விதமாக பயன்படுத்தியும் இருப்போம். அதுபோல எலுமிச்சை பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றியும் நமக்கு தெரியும். ஒருவேளை உங்களுக்கு எலுமிச்சை பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியவில்லை என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 எலுமிச்சை பழத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா.. இது தெரியாம போச்சே
சரி எலுமிச்சை பழத்தை நாம் ஜூஸ் போடுவது, லெமன் சாதம் செய்வது மற்றும் முகத்திற்கு பயன்படுத்துவது என்று செய்து வருகிறோம். ஆனால் இந்த எலுமிச்சை பழத்தை சும்மா நம் வீட்டு அறையில் வெட்டி மட்டும் வைத்தால் போதும். அதுவே நமக்கு பல நன்மைகளை செய்கிறது. அது என்ன என்று இங்கு காணலாம்.
எலுமிச்சை பழம் இயற்கையின் மிகவும் சக்தி வாய்ந்த பழங்களில் ஒன்றாகும். அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்டுள்ளன.
♦ எலுமிச்சை பழத்தை நறுக்கி உங்கள் படுக்கைக்கு அருகில் வைக்கவும். அவை காற்றில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் நோய்த்தொற்றுக்களை அழிக்கிறது. எனவே இதனை படுக்கை அறையில் வைப்பதால் அறையில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுப்பதுடன் கிருமிகளையும் அழிக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ எலுமிச்சை மரத்தில் காய்கள் அதிகமாக காய்க்க இதை செய்யுங்கள்..
♦ எலுமிச்சை பழத்தின் வாசனை இயற்கையான மனநிலையை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவு செய்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் உங்களுக்கு நிம்மதியான மற்றும் இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெற உதவும் என்று ஆய்வுகளை கூறுகின்றன.
♦ சளி, ஆஸ்துமா, தொண்டை அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் எலுமிச்சையை வெட்டி படுக்கும் அறையில் வைக்க வேண்டும். அதனால் இதன் வாசனையை நுகர்ந்துகொண்டே தூங்கும் போது சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
♦ எலுமிச்சை பழம் இயற்கை பூச்சிக்கொல்லி ஆகும். அதனால் எலுமிச்சையை எடுத்து அதனை இரண்டாக வெட்டி கொள்ளுங்கள். பின் அதன் நடுவில் கிராம்பை குத்தி வைத்து, படுக்கும் அறையில் வைக்க வேண்டும். இதுபோல செய்து வந்தால் கொசுக்கள், எறும்புகள், பூச்சிகளின் தொல்லைகளை அடியோடு விரட்டலாம்.
இதையும் படியுங்கள் ⇒ தூக்கி வீசும் எலுமிச்சை தோலில் இவ்வளவு பயன் இருக்கிறதா.!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |